• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவுக்கும் பாஸ்னியா-ஹெர்ஸகோவினியாவுக்குமிடை ஒத்துழைப்பு
  2010-05-07 18:55:16  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனத் தலைமையமைச்சர் வென்சியாபாவ் 7ம் நாள் பெய்சிங்கில் பாஸ்னியா-ஹெர்ஸகோவினிய அமைச்சர் அவைத் தலைவர் Nikola Spiricஉடன் பேச்சுவார்த்தை நடத்தினார். சீனாவில் பயணம் மேற்கொண்டு, ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் பாஸ்னியா-ஹெர்ஸகோவினிய அரங்கு நாள் விழாவில் கலந்து கொண்டதை வென்சியாபாவ் வரவேற்றார். பாஸ்னிய-ஹெர்ஸகோவினியாவின் சுதந்திரம், அரசுரிமை மற்றும் உரிமைப் பிரதேச ஒருமைப்பாட்டை சீனா மதிக்கிறது. இந்நாட்டில் உள்ள பல்வேறு தேசிய இன மக்கள் தெரிவு செய்யும் வளர்ச்சி பாதையையும் மதிக்கிறது. மேற்கு Balkan பிரதேசத்தில், நீண்ட அமைதி மற்றும் நிதானம் நிலவ வேண்டும் என்று சீனா விரும்புகிறது. இரு நாட்டுறவின் வளர்ச்சியை முன்னேற்ற விரும்புகிறது என்று வென்சியாபாவ் தெரிவித்தார். சீனாவுடன் உயர் நிலை தொடர்பை நிலைநிறுத்தி, சீனாவின் மைய நலன் தொடர்புடைய முக்கிய பிரச்சினைகளில் சீனாவை தொடர்ந்து ஆதரிக்கும் என்று Nikola Spiric தெரிவித்தார். பொருளாதார வர்த்தகம், அடிப்படை வசதிகளின் கட்டுமானம், கல்வி, பண்பாடு உள்ளிட்ட துறைகளில் சீனாவுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த பாஸ்னியா-ஹெர்ஸகோவினிய விரும்புவதாகவும் அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040