
"முதல் வாரத்தைப் பார்த்தால், முழு பூங்காவின் செயல்பாடு, வெளிப்புற போக்குவரத்து மற்றும் உட்புறத்தின் ஒவ்வொரு பணியும் பார்வையாளரின் தேவையை விரைவில் நிறைவு செய்ய முடிகிறது" என்று வூ சௌயாங் கூறினார்.
இவ்வாரத்தில், பல அரங்குகள் சிறப்பான திறப்பு விழாவையும் நாட்டின் அரங்கு நாள் நடவடிக்கையையும் நடத்தியுள்ளன. 6ஆம் நாள் இஸ்ரேலின் அரங்கு நாளாகும். சொந்த அரங்கைக் கட்டியமைத்து உலகப் பொருட்காட்சியில் இஸ்ரேல் கலந்து கொள்வது இதுவே முதல்முறை. யூத தேசத்தின் நீண்ட வரலாறு மற்றும் பண்பாட்டு மரபுச் செல்வங்களும், புதிய உயர் தொழில் நுட்பம், நவீன வேளாண்மை உள்ளிட்ட துறையில் இஸ்ரேல் பெற்றுள்ள முன்னேற்றங்களும் இதில் வெளிப்படுத்தப்படுகின்றன.
இவ்வாரத்தில் ஒவ்வொரு நாளும் பூங்காவில் நடைபெற்ற கலைநிகழ்ச்சிகள், பல்வேறு நாடுகளின் தனிச்சிறப்பு மிக்க பண்பாட்டையும் கலைகளையும் முழுமையாக வெளிப்படுத்தியுள்ளன.
சிறந்த உலகப் பொருட்காட்சியைப் பார்வையிடும் அதேவேளை, சுற்றுப் பயணிகள் பூங்காவிலுள்ள பல்வகை சேவைகளைக் குறித்து மனநிறைவு தெரிவித்தனர். அமரிக்காவின் GE நிறுவனத்தின் சீனப் பகுதித் தலைவர் Mark Norbom கூறியதாவது—
"உலகில் மிகப் பெரிய அளவிலான உலகப் பொருட்காட்சி இதுவாகும். ஏனென்றால் மக்களின் மனதில் இது ஆழப்பதிந்துள்ளது. பூங்காவில் நுழைந்து பயணம் மேற்கொள்வதில் பிரச்சினை ஏதுமில்லை. ஏற்பாட்டாளர்கள் மிகவும் நன்றாக அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளனர்" என்று அவர் கூறினார்.
மேலும், உலகப் பொருட்காட்சிப் பூங்காவில் மேலதிக சிறப்பான அம்சங்கள் பார்வையாளரின் கவனத்தை ஈர்க்கும் என்று ஷாங்காய் உலகப் பொருட்காட்சிப் பணியகத்தின் செய்திப் பிரிவுத் துணைத் தலைவர் வூ சௌயாங் தெரிவித்தார்.
"பல்வேறு நாடுகளின் அரங்கு நாள், பல்வேறு மாநிலங்கள் மற்றும் நகரங்களின் நடவடிக்கை வாரம், கலைநிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் முதலியவை அடுத்தடுத்து நடைபெறவுள்ளன" என்று அவர் கூறினார்.