• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஷாங்காய் உலக பொருட்காட்சிக்கு சர்வதேச சமூகத்தின் பாராட்டு
  2010-05-10 10:18:26  cri எழுத்தின் அளவு:  A A A   









மே முதல் நாள், ஷாங்காய் உலக பொருட்காட்சி சீன மற்றும் வெளிநாட்டு பயணிகளை அதிகாரப்பூர்வமாக வரவேற்க துவங்கியது. மேம்பட்ட நகரம், மேம்பட்ட வாழ்க்கை என்ற தலைப்பில், இப்பொருட்காட்சியில் கலந்துகொண்ட 240 நாடுகள், பிரதேசங்கள் மற்றும் சர்வதேச அமைப்புகள், மக்களிடம் பாண்பாடு, அறிவியல் தொழில் நுட்பம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றைக் கொண்ட எனும் மாபெரும் விருந்து உலக பொருட்காட்சி ஏன்றை அளித்துள்ளன. ஷாங்காய் உலக பொருட்காட்சி பல்வேறு நாடுகளுக்கிடையில் ஒன்றை ஒன்று கற்றுக்கொள்ளும் மேடையாக மாறும் என்று பல்வேறு நாடுகளின் செய்தி ஊடகங்கள் கருத்துத் தெரிவித்தன.
மேம்பட்ட நகரம், மேம்பட்ட வாழ்க்கை என்ற தலைப்பை சர்வதேச குடிவரவு அமைப்பின் தலைமை இயக்குநர் Swing வெகுவாக பாராட்டினார். அவர் கூறியதாவது:
ஷாங்ஹாய் உலக பொருட்காட்சியை சீனா வெற்றிகரமாக நடத்துவதில் நாங்கள் அதிகப் பெருமை அடைகின்றோம். தற்போது, பல்வேறு நாடுகளுக்கிடையில் 2 கோடியே 14 இலட்சம் போர் ஆண்டுதோறும் குடியேறி வருகின்றனர். இதில் பெரும் பகுதி மக்கள் நகரங்களில் வேலைவாய்ப்புகளை தேடுகின்றனர். ஏனவே, மேம்பட்ட நகரம், மேம்பட்ட வாழ்க்கை என்ற தலைப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த பொருட்காட்சியில் கலந்துகொள்வதற்கு சர்வதேச குடிவரவு அமைப்பு மகிழ்ச்சியடைகின்றது என்று அவர் கூறினார்.
இந்த உலக பொருட்காட்சி நகரமயமாகும் போக்கில் நிலவும் அடிப்படை பிரச்சினைகளை இறுகப்பற்றியுள்ளது என்று சர்வதேச தொழிலாளர் அமைப்பின் தலைமை இயக்குநர் Juan Somavia தெரிவித்தார். அவர் கூறியதாவது:

சர்வதேச தொழிலாளர் அமைப்பைப் பொறுத்த வரை, மதிப்புள்ள வேலைசெய்வதே அடிப்படை பிரச்சினையாகும் என்று அவர் கூறினார்.
ஷாங்காய் உலக பொருட்காட்சியில், பல்வேறு தேசிய அரங்குகளின் சிறப்பு நாட்களில் பல்வேறு நாடுகளின் அரசியல் தலைவர்கள் வெகுவாக கவனம் செலுத்தி வருகின்றனர். அமெரிக்க அரங்கின் சிறப்பு நாளின்போது, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் Hilary Clinton அம்மையார் அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தில் சிறப்பு செய்தியாளர் கூட்டம் நடத்தினார். ஷாங்காய் உலக பொருட்காட்சியின் மூலம், சீன-அமெரிக்க உறவின் வளர்ச்சி மேலும் முன்னேற வேண்டுமென Hilary அம்மையார் விருப்பம் தெரிவித்தார். அவர் கூறியதாவது:

2வது சீன-அமெரிக்க உத்திநோக்கு பொருளாதார பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளும் போது, உலக பொருட்காட்சி அரங்குகளை நான் பார்வையிடுவேன். அரசு சாரா பரிமாற்றத்தை தூண்டுவது என்பது சீன-அமெரிக்க உறவு தொடர்ந்து வளர்ந்து வரும் அடிப்படையாகும் என்று அவர் கூறினார்.
பெல்ஜியம்-ஐரோப்பிய ஒன்றிய அரங்கின் துவக்க விழாவில் ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்தின் தலைவர் ஜோஸ் மனுவேல் பார்ரோசோ உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளின் அரசியல் தலைவர்கள் கலந்துகொண்டுள்ளனர். சீனாவுடனான உறவில் ஐரோப்பிய ஒன்றியம் கவனம் செலுத்தி வருகின்றது. ஷாங்காய் உலக பொருட்காட்சியின் மூலம், சீனாவுடன் புரிந்துணர்வையும் நம்பிக்கையையும் மேலும் நன்கு அதிகரிக்கவும் விரும்புகின்றது என்று பார்ரோசோ தெரிவித்தார். அவர் கூறியதாவது:

ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வெளியே நடைபெறும் உலக பொருட்காட்சியில் ஐரோப்பிய ஒன்றியம் கலந்துகொள்வது இதுவே முதல்முறை. சீனாவுடனான உத்திநோக்கு ஒத்துழைப்பு கூட்டாளி உறவுக்கு நாம் தரும் பெரும் முக்கியத்துவத்தை இது காட்டுகின்றது என்று அவர் கூறினார்.
கனடாவுக்கும் சீனாவுக்குமிடையில் பொருளாதாரம், தூதாண்மை மற்றும் பண்பாட்டுறவின் ஆழமான வளர்ச்சிக்கு ஷாங்காய் உலக பொருட்காட்சி வாய்ப்பை வழங்கியுள்ளது. கனட மக்களின் சார்பில் இந்த பொருட்காட்சியின் ஏற்பாட்டுக்குழுவுக்கு நன்றி தெரிவிக்கின்றேன் என்று கனடா அரங்கு நாளின் போது, கனடா தலைமையமைச்சர் Stephen Harper கூறினார்.
கடந்த சில நாட்களில், வெளிநாட்டு செய்தி ஊடகங்கள் ஷாங்காய் உலக பொருட்காட்சி பற்றி பெருமளவில் செய்திகளை வெளியிட்டன.
மேம்பட்ட நகரம் மேம்பட்ட வாழ்கை என்ற தலைப்பிலான ஷாங்காய் உலக பொருட்காட்சியின் மூலம், முழு உலகமே எதிர்கால நகர வளர்ச்சியின் தோற்றத்தை முன்நோக்கி பார்க்கும் என்று தென் கொரிய மத்திய நாளேட்டின் இணைய தளக் கட்டுரை தெரிவித்தது.
வளரும் நாடு உலக பொருட்காட்சியை நடத்துவது இதுவே முதல் முறை. இந்த பொருட்காட்சியில், 21வது நூற்றாண்டில் நுழைந்த சீனாவின் ஆற்றலை எடுத்துக்காட்டியுள்ளது என்று ஜப்பானின் Yomiuri Shimbun கட்டுரை வெளியிட்டது. எதிர்காலத்தில், உலக மக்களுடன் சீனர் நெருக்கமாக இணைவர். ஷாங்காய் உலக பொருட்காட்சியில், பல்வேறு நாடுகளும் ஒன்றையொன்று கற்றுக் கொண்டு, புரிந்துணர்வை அதிகரிக்கலாம். சீனா உலக பொருட்காட்சியை நடத்துவதன் உண்மையான பொருள் இதுவாகும் என்று ஜப்பானின் Ashahi Shimbun கூறியது.

1851ம் ஆண்டு இலண்டன் உலக பொருட்காட்சி பிரிட்டனின் வளர்ச்சி காலத்தை துவக்கி வைத்ததால், 2010ம் ஆண்டு ஷாங்காய் உலக பொருட்காட்சி சீனாவின் உமரிய ஆற்றலையும் சீனரின் வளர்ச்சி கண்டறிந்த உறுதியான நம்பிக்கையையும் எடுத்துக்காட்டியுள்ளது என்று NCR Handelsblad அறிவித்துள்ளது. 19வது நூற்றாண்டு பிரிட்டனின் நூற்றாண்டாகும். 20வது நூற்றாண்டு அமெரிக்க நூற்றாண்டாகும். 21வது நூற்றாண்டு சீன நூற்றாண்டாகும் என்று இது கூறியது.
தவிர, இந்தியா, பிரேசில், பிரிட்டன், ஸ்விட்சர்லாந்து, மெக்சிகோ ஆகிய நாடுகளின் செய்தி ஊடகங்கள் கட்டுரை வெளியிட்டு, ஷாங்காய் உலக பொருட்காட்சிக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040