• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் பிரேசில் அரங்கு
  2010-05-11 09:47:31  cri எழுத்தின் அளவு:  A A A   








ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் பிரேசில் அரங்கு, pudong பிரதேசத்தில் உள்ளது. பசுமையான பிரேசில் அரங்கு, சதுர பறவைக் கூடு போல் உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. பிரேசில் அரங்கின் வடிவமைப்பு, பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் அரங்கான பறவைக் கூட்டின் கண்ணோட்டத்தைப் பயன்படுத்தியது என்று இந்த அரங்கின் தலைமைப் பிரதிநிதி தெஷெலா கூறினார்.
ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் பிரேசில் அரங்கு, 2000 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது. அமெரிக்க கண்ட சதுக்கத்தை ஒட்டி அமைந்துள்ளது. இது, அமெரிக்க, கொலம்பிய மற்றும் பெரு அரங்குகளுடன் இணைந்து, ஒத்த பகுதியில் காணப்படுறது. பிரேசில் அரங்கில் நுழைந்தவுடன், ஒரு பெரிய led திரையை காணலாம். இது மிகவும் சிறப்பானது. இவ்வரங்கின் தலைவர் பெத்ரோ கூறியதாவது
பிரேசில் அரங்கின் நுழைவாயிலில், ஒரு பெரிய led திரையை உருவாகினோம். இவ்வரங்கில் நுழைய காத்திருக்கும் போது, பார்வையாளர்கள் செல்லிடபேசி மூலம், இத்திரையுடன் இணைந்து, கால் பந்து விளையாடலாம். இதன் மூலம், மக்களின் களைப்பை தணிவு செய்யலாம் என்று அவர் கூறினார்.


ஷாங்காய் உலகப் பொருட்காட்சி, நாள்தோறும், 4 இலட்சம் பயணிகளை ஈர்க்கக் கூடும். அதேவேளை, பிரேசில் அரங்கு, ஒரு மணிக்கு சுமார் 4000 பார்வையாளரை உபசரிக்கின்றது. எனவே, இவ்வரங்கில் நுழைய காத்திருக்க வேண்டியுள்ளது. இப்பிரச்சினையைத் தீர்க்கும் வகையில், இந்தப் பெரிய திரையை உருவாக்கியுள்ளனர். இதை கண்டு மகிழ்ந்தபடி மக்கள் பொறுமையாகக் காத்திருப்பர்.
சுறுசுறுப்பான நகரம் என்பது பிரேசில் அரங்கின் தலைப்பாகும். நகரின் பல்வகை வாழ்க்கை மற்றும் பண்பாடு, மாநகரின் உயிர் ஆற்றல், விறுவிறுப்பாக வளர்ந்து வரும் பொருளாதாரம், தொடரவல்ல வளர்ச்சித் துறையில் பெற்றுள்ள சாதனைகள் முதலியவற்றை, பெரிய வளரும் நாடுகளில் ஒன்றான பிரேசில் இவ்வரங்கின் மூலம் எடுத்துக்காட்ட விரும்புகிறது. இவ்வரங்கின் தலைவர் பெத்ரோ மேலும் கூறியதாவது
சீனாவைப் போல, பிரேசில் வளரும் நாடுகளில் ஒன்றாகும். பிரேசிலின் பல்வேறு துறைகள் விரைவாக வளர்ந்து வருகின்றன. பிரேசில் மக்களின் மகிழ்ச்சி, நகருக்கு உயிர் ஆற்றலை ஊட்டுகிறது. அதேவேளை, எமது வர்த்தகம், முதலீடு, வணிக நடவடிக்கைகளும் பிரேசிலுக்கு மிகுந்த உயிர் ஆற்றலைக் கொண்டு வந்துள்ளன என்று அவர் கூறினார்.


பிரேசில் அரங்கில் நுழைந்தவுடன், ஒரு நகரக் காட்சிப் பிரிவைக் காணலாம். இதன் பரப்பளப்பு, 170 சதுர மீட்டராகும். பிரேசில் நாட்டின் காட்சிகளை இப்பகுதி பார்வையாளருக்கு எடுத்துக்காட்டுகிறது. அது மட்டுமல்ல, ஷாங்காய் உலகப் பொருட்காட்சி நடைபெறுகின்ற 6 திங்கள் காலத்தில், 2014ம் ஆண்டு உலகக் கோப்பை கால் பந்து விளையாட்டுப் போட்டியை நடத்தும் 12 நகரங்களின் காட்சிகள், பண்பாடுகளின் சிறப்புகள் மற்றும் தொடர்புடைய பரப்புரை நடவடிக்கைகள் முதலியவை நடைபெறும்.
நகரக் காட்சிப் பிரிவை அடுத்து, இன்பமான பிரேசில் என்ற தலைப்பிலான இரண்டாவது காட்சியரங்கைப் பார்க்கலாம். இதன் பரப்பளவு, 390 சதுர மீட்டராகும். பிரேசிலிலுள்ள பல்வேறு தேசிய இனங்களும், பொது மக்களின் உற்சாகம், மகிழ்ச்சி மற்றும் இன்பமான வாழ்க்கையும் இப்பிரிவில் காணப்படுகின்றன.
மக்கள் அனைவரும் அறிந்துகொள்கின்ற கால் பந்து மற்றும் சம்பா இசை மட்டுமல்ல, பிரேசிலின் பல்வகைப் பண்பாடுகள், வர்த்தகப் பரிமாற்றம், புதிய நகரை உருவாக்கும் அனுபவங்கள் உள்ளிட்டவற்றையும், ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் மூலம், பிரேசில் எடுத்துக்காட்ட விரும்புகிறது என்று இவ்வரங்கின் தலைவர் பெத்ரோ கூறினார்.

சுறுசுறுப்பான நகரம் என்ற தலைப்பில் பிரேசில் அரங்கு, 2010ம் ஆண்டு ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் மூலம், முழுமையான பிரேசிலை வெளிப்படுத்தும். பிரேசில் அரங்கு, சீன மக்களின் மனதில் இனிமையான கருத்துக்களை பதியச்செய்யும் என்பதில் ஐயமில்லை என்று அவர் தெரிவித்தார்.
இனி, மிகுந்த உற்சாகம் கொண்ட நகரம் மற்றும் சுறுசுறுப்பான பிரேசில் என்ற தலைப்பில், இவ்வரங்கின் முக்கிய காட்சியகத்தை பற்றி அறிவோம். 2014ம் ஆண்டு உலகக் கோப்பை கால் பந்து விளையாட்டுப் போட்டியை நடத்தும் நகரங்கள் பற்றிய படங்களும் தகவல்களும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நகரின் கட்டிடங்கள் உள்ளிட்டவை இதில் இடம்பெறுகின்றன.
ஷாங்காய் மாநகரிலுள்ள பிரேசிலின் துணை நிலை தூதர் மார்கஸை பொறுத்தவரை, உலகப் பொருட்காட்சி மூலம் பிரேசில் மக்களின் வாழ்க்கையை ஆழமாக எடுத்துக்காட்ட வேண்டும். இதன் விளைவாக, மேம்பட்ட நகரம், மேம்பட்ட வாழ்க்கை என்ற ஷா ங்காய் உலகப் பொருட்காட்சியின் தலைப்பை வெளிப்படுத்தலாம். இது, 2010ம் ஆண்டு ஷாங்காய் உலகப் பொருட்காட்சியில் பிரேசில் கலந்துகொள்வதன் நோக்கமாகும்.

இவ்வாண்டு ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் தலைப்பு, முக்கியத்துவம் வாய்ந்தது. இப்பொருட்காட்சியின் மூலம், சமூகத்தின் பல்வேறு துறைகள் மக்களுக்கு அறிமுகப்படுத்தப்படும். மேலதிக வாய்ப்புகளைப் பயன்படுத்தி இத்தலைப்பை எடுத்துக்கூறலாம். எடுத்துக்காட்டாக, அறிவியல் தொழில் நுட்பம், நகரின் வளர்ச்சி, நகரின் மேலாண்மை மற்றும் தொழில் நுட்பம் போன்ற துறைகளைச் சார்ந்து இத்தலைப்பை எடுத்துக்காட்ட முடியும். ஆனால், பிரேசில் பொது மக்களின் வாழ்க்கையை அறிமுகப்படுத்துவதன் மூலம், ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் தலைப்பை மேலும் சீராக விளக்கிக்கூறலாம். இதுவே எமது வழிமுறையாகும் என்று அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040