மே திங்கள் 12ம் நாள், சீனாவின் சிச்சுவான் மாநிலத்தில் வென் சுவான் நிலநடுக்கம் நிகழ்ந்த 2வது ஆண்டு நினைவு நாளாகும். ஏப்ரல் திங்கள் வரை, சிச்சுவான் மாநிலத்தில் நிடுநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு 4860 கோடி யுவான் மதிப்புள்ள கடன்தொகையை ஒதுக்கிவைத்து, மறுசீரமைப்புப் பணிக்கு சீன தொழில் மற்றும் வணிக வங்கி உதவி செய்தது.
மறுசீரமைப்புத் திட்டப்படி, அம்மாநிலத்தின் போக்குவரத்து, மின்னாற்றல், நகரின் கட்டுமானம், எண்ணெய் மற்றும் வேதியியல் துறை, தொலைத்தொடர்பு துறை முதலியவற்றுக்கு, இவ்வங்கி மேலதிக கடன்களை வழங்கியது. அதேவேளை, சிறிய நாணயச் சேவை பிரிவை உருவாக்கி, Chengdu,deyang,mianyang போன்ற நகரங்களிலுள்ள சிறிய தொழில் நிறுவனங்களின் மறுசீரமைப்புக்கு இவ்வங்கி நாணயச் சேவையை வழங்கியது.