இன்று, சிச்சுவான் மாநிலத்தின் Wen Chuanவில் கடும் நிலநடுக்கம் நிகழ்ந்ததன் இரண்டாவது ஆண்டு நினைவு நாளாகும். நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் மறுசீரமைப்புக்காக ஹாங்காங்கின் உதவியுடன் மேற்கொள்ளப்படும் திட்டப்பணிகள் நிதானமாக நடைபெற்று, கட்டுமானத்தின் உச்ச நிலையில் படிப்படியாக நுழைந்துள்ளன. ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேச அரசின் அரசியல் விவகாரப் பிரிவுத் தலைவர் Tang Ying Nian அண்மையில் இதைத் தெரிவித்தார்.
இது வரை, மறுசீரமைப்பு திட்டப்பணிகளுக்கு ஹாங்காங் வழங்கிய நிதித்தொகை, முன்பு வாக்குறுதி அளித்த ஆயிரம் கோடி ஹாங்காங் டாலரை எட்டியுள்ளது. 185 மறுசீரமைப்புத் திட்டப்பணிகள், கல்வி, மருத்துவ சிகிச்சை, சமூக நலம், பயிற்சி, Wo Long இயற்கைப் பாதுகாப்பு மண்டலத்தின் மறுசீரமைப்பு உள்ளிட்ட பல துறைகளில் இடம்பெறுகின்றன. அனைத்து திட்டப்பணிகளும் அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் நிறைவேற்றப்படும் என்று தெரிகிறது.