
அமெரிக்கா, இந்தியா, தென்கொரியா, பிரேசில் முதலிய நாடுகள் மற்றும் ஐ.நா, சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியம் முதலிய நிறுவனங்களின் நிபுணர்கள், தகவல்மயமாக்கத் தொழில் துறை, தகவல்மயமாக்கம் மற்றும் நகர வாழ்க்கை, தகவல்மயமாக்கம் மற்றும் உலக ஒத்துழைப்பு உள்ளிட்ட பிரச்சினைகளை பற்றி விவாதித்தனர்.
இணையத்தின் தந்தை என்று அழைக்கப்பட்ட அமெரிக்க நிபுணர் ராபர்ட் கான் இக்கருத்தரங்கில் உரை நிகழ்த்தினார். இணையத்தின் வளர்ச்சி, ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை பெருமளவி்ல் முன்னேற்ற முடியும். சீனாவின் இணையப் பயன்பாட்டாளரின் எண்ணிக்கை, உலகில் முதலிடம் வகிக்கிறது. இதனால், சீனப்பொருளாதாரத்தில் ஆழமான செல்வாக்கு எற்பட்டது என்று அவர் கருத்து தெரிவித்தார்.
சீனத் தொழில் துறை மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் லீயீசுங் கருத்தரங்கில் பேசுகையில், தகவல்மயமாக்க முன்னேற்றப்போக்கு, சீன மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூகப் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்தி வருகிறது என்று குறிப்பிட்டார்.
தகவல் வலைப்பின்னல் அடிப்படை வசதியின் கட்டுமானத்தை வலுப்படுத்தும் பொருட்டு, இணையத்தின் வளர்ச்சியை மேம்படுத்தி, தொலைத்தொடர்பு, இணையம், வானொலி, திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி ஆகியவற்றின் இணைப்பின் முன்னேற்றத்தை விரைவுபடுத்த சீனா பாடுபட வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
தவிர, சீனா, தகவல்மயமாக்கம் மற்றும் நகரமயமாக்கக் கட்டுமானத்தைத் தொடர்ந்து வலுப்படுத்தி, முன்னேறிய அறிவியல் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி, பாரம்பரிய தொழில்துறைகளைச் சீர்திருத்தும் என்றும் லீயீசுங் கூறினார்.
இக்கருத்தரங்கில் பல்வேறு நாடுகளின் நிபுணர்கள், தகவல்மயமாக்க வளர்ச்சிப் பாதையில் தத்தமது நாடுகள் பெற்றுள்ள அனுபவங்களையும் எதிர்காலத்திட்டங்களையும் அறிமுகப்படுத்தினர்.
நடப்பு கருத்தரங்கு உட்பட ஷாங்காய் உலகப் பொருட்காட்சிக்காலத்தில், ஒரு உச்சிமாநாடும் ஆறு தலைப்பு கருத்தரங்குகளும் நடைபெறும். கண்காட்சி, கலை நிகழ்ச்சி ஆகியவற்றுடன், இந்த கருத்தரங்குகள், மேம்பட்ட நகரம் மேம்பட்ட வாழ்க்கை என்ற ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் தலைப்பைக் கூட்டாக வெளிப்படுத்தும்.