• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
18வது சீன குன்மிங் இறக்குமதி ஏற்றுமதிப் பொருட்களின் வர்த்தக பொருட்காட்சி
  2010-05-21 15:47:40  cri எழுத்தின் அளவு:  A A A   

18வது சீன குன்மிங் இறக்குமதி, ஏற்றுமதிப் பொருட்களின் வர்த்தக பொருட்காட்சியும், தெற்காசிய நாடுகளின் 3வது வர்த்தக பொருட்காட்சியும், 5வது சீன தெற்காசிய வர்த்தக மன்றக் கூட்டமும் சீனாவின் யுன்னான் மாநிலத்தின் குன்மிங் நகரில் நடைபெறவுள்ளது. 5வது சீன தெற்காசிய வர்த்தக மன்றக் கூட்டம் ஜூன் 5, 6 ஆகிய நாட்களிலும் பொருட்காட்சிகள் இரண்டும் 6 முதல் 10 ஆம் நாள் வரையும் நடைபெறவுள்ளன. இதையெட்டி பெய்ஜிங்கில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கிடைத்த தகவல் இதை தெரிவித்தது.

குன்மிங் வர்த்தக பொருட்காட்சி என்று பொதுவாக அறியப்படும் சீன குன்மிங் இறக்குமதி, ஏற்றுமதி பொருட்களின் வர்த்தக பொருட்காட்சி சீனாவின் வணிக அமைச்சகம், யுன்னான், சிச்சுவான், குவெய்சோ குஆன்சி மாநிலங்கள் சொங்சிங்,செந்து மாநகரங்கள் இணைந்து நடத்துகின்ற பிரதேச வர்த்தக பொருட்காட்சியாகும். இது ஏற்றுமதி, இறக்குமதி, எல்லை கடந்த வர்த்தகம், முதலீடு, பொருளாதரா மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புகளை வளர்க்கும் மேடையாக இருந்துவருகிறது. ஐந்தாயிரத்திற்கு மேற்பட்ட வெளிநாட்டு வர்த்தகர்களை இப்பொருட்காட்சி ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குன்மிங் வர்த்தக பொருட்காட்சி நடைபெறும் அதே நாட்களில் தெற்காசிய நாடுகளின் 3வது வர்த்தக பொருட்காட்சியும் நடைபெறுகின்றது. இதிலுள்ள 350 அரங்குகள் முழுவதும் பதிவாகிவிட்டன. 100 அரங்குகளுக்கு மோலாக பதிவாக்கும் என எதிர்பார்க்கப்படும் இலங்கை இதுவரை 85 அரங்குகளை உறுதிசெய்துள்ளது.

இதற்கு முன்னதாக ஜூன் 5, 6 ஆகிய நாட்களில் 5வது சீன தெற்காசிய வர்த்தக மன்றக் கூட்டம் குன்மிங்கில் நடைபெறுகிறது. இந்நாடுகளின் பொருளாதரா கொள்கைகள், வங்கி மற்றும் வர்த்தக ஒத்துழைப்பு ஆகிய அம்சங்கள் சீன மற்றும் தெற்காசிய நாடுகளின் பிரதிநிதிகளால் விவாதிக்கப்படும். தெற்காசிய நாடுகள் சீனாவில் முதலீடு செய்வதும் ஊக்குவிக்கப்படுமென தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040