• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன குன்மிங் இறக்குமதி, ஏற்றுமதிப் பொருட்களின் வர்த்தகப் பொருட்காட்சி
  2010-05-22 18:00:09  cri எழுத்தின் அளவு:  A A A   
18வது சீன குன்மிங் இறக்குமதி, ஏற்றுமதிப் பொருட்களின் வர்த்தகப் பொருட்காட்சியும், தெற்காசிய நாடுகளின் 3வது வர்த்தகப் பொருட்காட்சியும், சீன தெற்காசிய வர்த்தக மன்றத்தின் 5வது கூட்டமும் சீனாவின் யுன்னான் மாநிலத்தின் குன்மிங் நகரில் நடைபெறவுள்ளது. இதையொட்டி 21 ஆம் நாள் பெய்ஜிங்கில் செய்தியாளர் கூட்டம் நடைபெற்றது.
நிதி நெருக்கடியை சமாளித்து வரும் இவ்வேளையில் சீனா மற்றும் தெற்காசிய நாடுகளின் வர்த்தக வளர்ச்சிக்கு உதவும் முக்கிய பொருட்காட்சிகளாகவும், மன்றக்கூட்டமாகவும் இவை பார்க்கப்படுகின்றன. குன்மிங் வர்த்தகப் பொருட்காட்சி என்று பொதுவாக அறியப்படும் சீன குன்மிங் இறக்குமதி, ஏற்றுமதி பொருட்களின் வர்த்தகப் பொருட்காட்சி ஜூன் 6 முதல் 10 ஆம் நாள் வரை யுன்னான் மாநிலத்தின் குன்மிங்கிலுள்ள அனைத்துலக மாநாடு மற்றும் கண்காட்சி மையத்தில் நடைபெறும்.
 சீனாவின் வணிக அமைச்சகம், யுன்னான், சிச்சுவான், குவெய்சோ குவான்சி மாநிலங்கள் சொங்சிங், செந்து மாநகரங்கள் இணைந்து நடத்துகின்ற பிரதேச வர்த்தகப் பொருட்காட்சி இதுவாகும். பிரதேச வர்த்தகத்தில் இதன் செல்வாக்கு பற்றி யுன்னான் மாநிலத்தின் துணைத் தலைவர் Gu Zhaoxi குறிப்பிடுகையில்,
ஏற்றுமதி, இறக்குமதி, எல்லை கடந்த வர்த்தகம், முதலீடு, பொருளாதரா மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புகளை வளர்க்கும் மேடையாக இருந்து வருகிறது என்று கூறினார்.
இந்தப் பொருட்காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ள காட்சி அரங்குகள், சிறப்பு அலங்காரப் பகுதிகள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டுவிட்டன. ஆயிரக்கணக்கான உள்ளூர் வணிகர்கள் மற்றும் நுகர்வோரையும், ஐந்தாயிரத்திற்கு மேற்பட்ட வெளிநாட்டு வர்த்தகர்களையும் இப்பொருட்காட்சி ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பொருட்காட்சி நடைபெறும் அதேநாட்களில் தெற்காசிய நாடுகளின் 3வது வர்த்தகப் பொருட்காட்சியும் குன்மிங்கில் நடைபெறுகின்றது.
தெற்காசிய நாடுகளின் சில தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள், 85க்கு மேற்பட்ட பிரதிநிதிகள், அமைச்சர்கள் நிலை உள்பட தேசிய நிலை அலுவலர்கள் பலர் இதில் கலந்து கொள்வர். 100 க்கு மேலான காட்சி அரங்குகளை பதிவுசெய்யும் என்று எதிர்பார்க்கப்படும் இலங்கை இதுவரை 85 அரங்குகளை உறுதிசெய்துள்ளதை தெரிவித்த இலங்கை தூதர் கருணா திலக அமுனுகம, தெற்காசிய நாடுகளின் வர்த்தக மேம்பாடும், ஒத்துழைப்பும் விரைவாக வளர யுன்னானில் நிரத்தர வர்த்தக காட்சி மையத்தை அமைக்க பரிந்துரை வழங்கினார்.
மேலும், சீன நடுவண் அரசின் ஆலோசனைகளின்படி தாராள வர்த்தக மண்டலம் அமைக்க யுன்னான் முயற்சிகளை மேற்கொண்டால் தெற்காசிய நாடுகளின் வர்த்தக வளர்ச்சிக்கும் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கும் பெரும் உதவியாக இருக்கும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இந்த இரு பொருட்காட்சிகள் தொடங்குவதற்கு ஒரு நாள் முன்னதாக, அதாவது ஜூன் 5 நாள் சீன தெற்காசிய வர்த்தக மன்றத்தின் 5வது கூட்டம் குன்மிங்கில் துவங்கி 6 ஆம் நாள் முடிவடையும். தெற்காசிய நாடுகளின் பொருளாதரா கொள்கைகள், வங்கி மற்றும் வர்த்தக ஒத்துழைப்பு ஆகிய அம்சங்கள் இம்மன்ற நாடுகளின் பிரதிநிதிகளால் விவாதிக்கப்படும். தெற்காசிய நாடுகள் சீனாவில் முதலீடு செய்வதும் ஊக்குவிக்கப்படுமென தெரிகிறது.
18வது சீன குன்மிங் இறக்குமதி, ஏற்றுமதிப் பொருட்களின் வர்த்தகப் பொருட்காட்சி, தெற்காசிய நாடுகளின் 3வது வர்த்தகப் பொருட்காட்சி, சீன தெற்காசிய வர்த்தக மன்றத்தின் 5வது கூட்டமென முப்பெரும்விழாக் கோலம் அடையவுள்ள யுன்னான் மாநிலம் சீனா, தெற்காசிய நாடுகளுக்கிடை வர்த்தக மற்றும் பிற ஒத்துழைப்புகளை வளர்க்கும் முக்கிய ஆற்றலாக மாறும் வாய்ப்புகள் அதிகரித்துவருகிறது.
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040