
29ம் நாள் இரவு 8 மணி வரை, அந்நாளில் ஷாங்காய் உலகப் பொருட்காட்சியில் பயணம் மேற்கொண்ட பயணிகளின் எண்ணிக்கை 5 இலட்சத்து 400ஐ எட்டியது. இது உலகப் பொருட்காட்சி துவங்கிய பின் ஒரே நாளில் பயணிகளின் மிக அதிக எண்ணிக்கையாகும். 28ம் நாள் இருந்ததை விட 29ம் நாளில் பயணிகளின் எண்ணிக்கை சுமார் ஒரு இலட்சம் அதிகரித்தது. இருப்பினும், தோட்டத்திலுள்ள ஒழுங்கு சீராகவுள்ளது. பயணிகள் அதிகரித்த போதிலும், வரிசையாக நின்ற காலம் அதிகரிக்கவில்லை என்று இந்திய காட்சி அரங்கு உள்ளிட்ட சில காட்சி அரங்குகளின் பணியாளர்கள் தெரிவித்தனர். 29ம் நாள், உலகப் பொருட்காட்சித் தோட்டத்தில் சுமார் 60 கலை அரங்கேற்றங்கள் நடைபெற்றன என்று தெரிகிறது.