• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
முக்கிய அறிவிப்பு
  2010-06-03 17:12:33  cri எழுத்தின் அளவு:  A A A   
ஷாங்காய் உலகப் பொருட்காட்சியை வாய்ப்பாகப் பயன்படுத்தி, நேயர்களிடையில் சீன மொழி கல்வியை பரவலாக்கும் பொருட்டு, ஜுன் 3 முதல் 25ம் நாள் வரை உலகப் பொருட்காட்சிக்கு வாழ்த்துக்கள் என்ற நடவடிக்கையை சீன வானொலி நிலையம் நடத்துகிறது. நீங்கள் அனுப்புகின்ற படைப்புகள் நமது இணையதளத்தில் வெளியிடப்படும்.

ஒளி மற்றும் ஒலிப் பதிவுப்படைப்புகள், நேர்த்தியான சீன கையெழுத்து படைப்புகள், ஓவியப் படைப்புகள், கைவினை படைப்புகள் ஆகியவற்றின் மூலம் இதில் கலந்து கொள்ள நேயர்களை அழைக்கின்றோம். சிறந்தப் படைப்புகளை அனுப்பும் நேயர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.

இது பற்றிய மேலதிக விபரங்கள் அறிய சீன வானொலி தமிழ் இணையத்தைப் பாருங்கள்.

படைப்புகள் அனைத்தும் சீன மற்றும் தமிழ் மொழிகளில் உருவாக்கப்பட வேண்டும். படைப்புக்கள் அனைத்தும் தலைப்பை மையமாக கொண்டிருக்க வேண்டும்.

ஒலி மற்றும் ஒளிப் பதிவுப் படைப்புகள் பின்வருமாறு அமைய வேண்டும்.

1. உலகப் பொருட்காட்சி வாழ்த்துக்கள் பற்றியதாக சீன மற்றும் தமிழ் மொழிகளில் மொத்த நீளம் 90 வினாடிகளுக்குள் இருக்க வேண்டும். இரு மொழிகளும் பயன்படுத்தப்படிருக்க வேண்டும்.

2. ஒளி வடிவம் AVI, PEPG, WMA, 720*480 என்ற வடிவங்களில் அனுப்பப்பட வேண்டும்.

3. ஒலி வடிவம் WAV 44.1K அல்லது MP3 44.1k/192kbps என்ற வடிவில் அமைய வேண்டும்.

நேர்த்தியான சீன கையெழுத்து படைப்புகள்

1. சீன மற்றும் தமிழ் மொழியில் எழுதப்பட வேண்டும்.

2. பயன்படுத்தும் தாள் அளவு A4அளவுக்கு மேலாக இருக்க வேண்டும்.

ஓவியப் படைப்புகள்

1. சீன மற்றும் தமிழ் மொழியில் தலைப்புகள் இடம்பெற வேண்டும்.

2. பயன்படுத்தும் தாள் அளவு A4அளவுக்கு மேலாக இருக்க வேண்டும்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040