• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பன்னாட்டுப் பண்பாடுகள் ஒன்றிணைந்த ஷாங்காய் உலகப் பொருட்காட்சி
  2010-06-15 15:08:49  cri எழுத்தின் அளவு:  A A A   

ஷாங்காய் உலகப் பொருட்காட்சி பூங்கா மக்களுக்கு திறந்து வைக்கப்பட்ட பின்னர், பல்வேறு காட்சி அரங்குகளில் பல்வகை கலைநிகழ்ச்சிகள் நாள்தோறும் அரங்கேற்றப்பட்டு வருகின்றன. இவை இரசிகர்களை மகிழ்வூட்டும் அதேவேளை, இந்த நிகழ்ச்சிகள் மூலம் உலகின் பல்வேறு பகுதிகளின் பண்பாடுகளை மக்கள் புரிந்துக் கொண்டுள்ளனர். பல பண்பாடுகளுக்கு, ஷாங்காய் உலகப் பொருட்காட்சி, ஒரு சிறந்த காட்சி அரங்கமாகும். வேறுபட்ட பண்பாடுகளிடை பரிமாற்றம், ஒன்றிணைப்பு, சகவாழ்வு ஆகியவை நனவாகுவது இங்கே எடுத்துக்காட்டப்படுகிறது.

 

"நகர மேம்பாடு மற்றும் பண்பாட்டு பரவல் " என்ற தலைப்பில், இப்பொருட்காட்சியின் 2வது கருத்தரங்கு அண்மையில் நடைபெற்றது. பண்பாடு, மனிதக் குலத்தின் மையமாகும் என்று ஐ.நாவின் யுனேஸ்கோ அமைப்பின் துணைத் தலைமை இயக்குநர் ஹன்ஸ் டி ஓர்விலி தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது

மனித குலத்தின் புதுமையைப் பொறுத்த வரை, பண்பாடு, ஓர் அடிப்படையாகும். மனித குலத்தின் வளர்ச்சியின் தொடர்ச்சியில் இது பங்காற்றுகிறது என்றார் அவர்.

பல்வகை பண்பாடுகளிடை ஒன்றிணைப்பு மற்றும் சகவாழ்வு என்பது, இக்கருத்தரங்கின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக இருந்தது. வேறுபட்ட பண்பாடுகளிடை பரிமாற்றம் தொடர்பான பிரச்சினைகள் குறித்து இதில் முக்கியமாக விவாதிக்கப்பட்டது. ஆப்பிரிக்காவின் நகரங்களில் ஏற்பட்ட இது போன்ற இப்பிரச்சினை பற்றிய அனுபவங்களை, கென்யாவின் நைரோபி நகராட்சித் தலைவர் ஜியோஃஃபிரி மஜிவா அறிமுகப்படுத்தினர். அவர் கூறியதாவது

முதலில், தாய்நாட்டின் பண்பாட்டை மிகவும் மதிக்கின்றோம். அதேவேளை, நட்பார்ந்த நாடுகளின் பண்பாடுகளில் அதிக கவனம் செலுத்துகின்றோம். இந்த நிலையில், உயர் நிலை பண்பாடுகளைக் கற்றுக்கொள்வதன் மூலம் தொடர்ந்து முன்னேற்றம் பெறுகின்றோம் என்று மஜிவா கூறினார்.

ஷாங்காய் உலகப் பொருட்காட்சியில், கீழை மற்றும் மேலை நாடுகளின் நகரப் பண்பாடுகள் ஒன்றிணைந்து வெளியாகியுள்ளன. உலகின் பல்வேறு நாடுகளின் பண்பாடுகள், சீனாவில் பரந்தளவில் பரவி வளர்ச்சியடைந்து வருகின்றன. பல்வகை பண்பாடுகளிடை பரிமாற்றத்திற்கு, இப்பொருட்காட்சி சாதகமான வாய்ப்புக்களை வழங்குகிறது. ஆனால், பொதுவாக கூறின், மனிதரே, பண்பாடுகளைப் பரவல் செய்து வெளிக்கொணரும் முக்கிய கருவியாக உள்ளனர். மனிதர்களிடை நட்புப் பரிமாற்றமும் தொடர்புமே, நகரப் பண்பாடுகளின் ஒன்றிணைப்பின் சாராம்சம் ஆகும். பண்பாடுகளைப் பரப்புரை செய்ய இந்த கலைநிகழ்ச்சிகளை அரங்கேற்றும் நடிகர்களும் அரங்குகளையும் கலைநிகழ்ச்சிகளையும் கண்டுகளித்த இரசிகர்களும், அவரவர் சொந்த நாடுகளின் பண்பாடுகளை வெளிப்படுத்தினர். இது, சீனா மற்றும் சீனப் பண்பாடுகளின் பரவலைப் பொறுத்தவரை, மேலும் முக்கியமானது என்று ஷாங்காய் உலகப் பொருட்காட்சி ஆணையத்தின் செயற்குழுவின் துணைத்தலைவர் சோ ஹன்மின் கருத்து தெரிவித்தார். அவர் கூறியதாவது

சீனத் தேசிய இனம் உலகிற்கு தன்னை வெளிப்படுத்தும் ஒரு வாய்ப்பு, இப்பொருக்காட்சி ஆகும். தலைசிறந்த வரலாற்றுத் தொடர்ச்சி, சீனாவுக்கு உண்டு. மேலும், சீனா அமைதியை நேசித்து, நேர்மையை பின்பற்றி, வளர்ச்சியை நாடுகின்றது என்று சோ ஹன்மின் குறிப்பிட்டார்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040