• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
20 நாடுகள் குழுவில் சீனாவின் பங்கு மீதான பாராட்டு
  2010-06-22 10:03:06  cri எழுத்தின் அளவு:  A A A   
20 நாடுகள் குழு உருவாகி, வளரும் போக்கில் சீனா வெளிக்கொணர்ந்து வரும் முக்கிய பங்குகளை ரஷிய அரசுத் தலைவரின் உதவியாளர் Arkady Dvorkovich 21ம் நாள் மாஸ்கோவில் வெகுவாக பாராட்டினார்.
கனடாவில் நடைபெறவுள்ள எட்டு நாடுகள் குழு மற்றும் 20 நாடுகள் குழு உச்சி மாநாடுகள் பற்றிய செய்தியாளர் கூட்டத்தில் அவர் இவ்வாறு கூறினார். இவ்வுச்சி மாநாடுகளில் சீனாவின் பங்கெடுப்பு இல்லை என்றால், உலகப் பொருளாதார வளர்ச்சி பிரச்சினையை விவாதித்து, தீர்ப்பதில் அதிக இன்னல்கள் ஏற்படும். 20 நாடுகள் குழு உச்சி மாநாட்டில் சீனத் தலைவர்களின் கருத்து, உலகப் பொருளாதாரத்தை நிதானப்படுத்தும் முக்கிய காரணியாகும் என்று Arkady Dvorkovich தெரிவித்தார்.
ரென்மின்பி மாற்று விகிதத்தின் அமைப்பு முறைச் சீர்திருத்தத்தை சீனா மேலும் விரைவுபடுத்துவது, வெளிப்புற கட்டாயத்துக்கு அடிபணிந்ததாக பொருள்படாது என்றும் அவர் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040