
"ஷாங்காய் உலகப் பொருட்காட்சியில் லண்டன் நகரின் எரியாற்றல் செலவு இல்லாத உயிரின வாழ்க்கை வசிப்பிட வளர்ச்சி திட்டப்பணி மாதிரி அரங்கு, "கரி வெளியேற்றம் இல்லாத அரங்கின்" முழு பெயர் ஆகும். "கரி வெளியேற்றம் இல்லாத அரங்கில்", அனைத்து தொழில் நுட்பங்களிலும் கரி வெளியேற்றம் குறைந்த கருத்து வெளிப்படுத்தப்படுகிறது. கரி வெளியேற்றம் இல்லாத அரங்கின் செய்தி ஊடகப் பிரிவின் தலைவர் Xu Song செய்தியாளரிடம் பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:
"உலகப் பொருட்காட்சிக்கு வருகை தந்த பயணிகள், சிறப்பு துறைப் பிரமுகர்கள் உள்ளிட்ட பொது மக்களிடம் கரி வெளியேற்றம் இல்லாத கருத்தைப் பரவல் செய்யும். உண்மையில் 'கரி வெளியேற்றம் இல்லாத அரங்கு', அனைத்து தொழில் நுட்ப முறைமைகளின் சரிப்படுத்தலாகும்" என்றார், அவர்.
பத்து ஆண்டுகளுக்கு முன், பிரிட்டன் தலைநகர் லண்டனில், "கரி வெளியேற்றம் இல்லாத அரங்கின்" தொழில் நுட்பங்களை அடிப்படையாக கொண்ட கரி வெளியேற்றம் குறைந்த குடியிருபு்புகள் உருவாக்கப்பட்டன. வெப்பத்தைத் தடுப்பது உள்ளிட்ட வடிவமைப்பும், சூரிய ஆற்றல், காற்று ஆற்றல், உயிர் வள எருக்களின் எரியாற்றல் உள்ளிட்ட புதுப்பிக்க வல்ல எரியாற்றலும் பயன்படுத்தப்படுவதால், சாதாரண குடியிருப்புகளில் இருப்பதை விட இந்த கரி வெளியேற்றம் இல்லாத குடியிருப்புகளில், 80 விழுக்காட்டு வெப்பமும், 45 விழுக்காட்டு மின்சாரமும் சிக்கனப்படுத்தப்படுகின்றன. "கரி வெளியேற்றம் இல்லாத அரங்கின்" கருத்து மற்றும் தொழில் நுட்பங்கள் சீனாவில் பரவி வரும் நிலைமை ஏற்பட்டுள்ளது என்றும், அடுத்த 5 ஆண்டுகளில், "கரி வெளியேற்றம் இல்லாத அரங்கு" போன்ற கட்டிடங்கள் சீனாவில் விரிவாக பரவல் செய்யப்படக்கூடும் என்றும் "கரி வெளியேற்றம் இல்லாத அரங்கின்" தலைவர் Chen Shuo கருத்து தெரிவித்தார்.
கடந்த ஜூன் திங்கள் இறுதியில், Tong Zhou பிரதேச அரசின் துணைத் தலைவர் Zhang Yong உள்ளிட்ட குழுவினர், "கரி வெளியேற்றம் இல்லாத அரங்கை"ப் பார்வையிட்டனர். நவீன புதிய சர்வதேச நகரை உருவாக்க Tong Zhou பிரதேச அரசு பாடுபட்டு வருகிறது. "கரி வெளியேற்றம் இல்லாத அரங்கை"ப் பார்வையிட்ட பின் Zhang Yong கூறியதாவது:
"புதிய நகரை உருவாக்குவதில், கரி வெளியேற்றம் குறைப்பு, கரி வெளியேற்றமின்மை என்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருத்தில் ஊன்றி நிற்க வேண்டும்" என்றார், அவர்.
உலகப் பொருட்காட்சிக்கு பின் "கரி வெளியேற்றம் இல்லாத அரங்கு" Tong Zhou பிரதேசத்துக்கு மாற்றப்பட வேண்டும் என்று Zhang Yong உளமார்ந்த அழைப்பு விடுத்தார். இந்த அரங்கு, Tong Zhou பிரதேசம், பெய்சிங் மாநகரம் மற்றும் இதர நகரங்களின் கரி வெளியேற்றம் குறைந்த நகர வளர்ச்சி கருத்துக்கு வழிகாட்ட வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்தார்.