வாங் காங்நியன் உரை நிகழ்த்துகையில், கடந்த பல்லாண்டு காலத்தில் சீன வானொலி நிலையத்துக்கும் இலங்கை நேயர்களுக்குமிடையில் ஆழ்ந்த நட்புறவு நிறுவப்பட்டுள்ளது என்றும், சீன வானொலிக்கு நேயர்களும் நேயர் கடிதங்களும் மிக அதிகமாக உள்ள நாடுகளில் ஒன்றாக இலங்கை மாறியுள்ளது என்றும் கூறினார். இந்த பண்பலை, இருதரப்புறவின் வளர்ச்சிக்கும் ஒலிபரப்புத் துறையிலான இருநாடுகளின் பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்புக்கும் மேலும் பெரும் பங்காற்றும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இலங்கை தலைமை அமைச்சர் பேசுகையில், சீன-இலங்கை நட்புறவை பாராட்டியதோடு, நீண்டகாலமாக இலங்கைக்கு உதவியளிக்கும் சீன அரசுக்கு நன்றியையும் தெரிவித்தார்.
ஏப்ரல் 23ஆம் நாள் முதல், சீன வானொலி இலங்கை பண்பலை 102 ஒலிபரப்பில் சிங்களம், தமிழ், ஆங்கிலம் மற்றும் சீன மொழியிலான நிகழ்ச்சிகள் நாள்தோறும் 19 மணிநேரம் வழங்கப்படுகின்றன.