16வது ஆசிய விளையாட்டுப் போட்டி இவ்வாண்டு நவம்பர் திங்களில் சீனாவின் குவாங் ஷோ நகரில் துவங்கவுள்ளது. அதனை வரவேற்க, குவாங் சோ நகரம் மக்களின் வாழ்க்கைச் சூழலை மேம்படுத்தும் பல்வேறு அடிப்படைக் கட்டுமான திட்டப்பணிகளை மேற்கொண்டு வருகின்றது. கட்டிடம் மற்றும் சாலை செப்பனிடுதல், தொலைபேசி மற்றும் தொலைக்காட்சி அலைக்கம்ப வசதிகளை மேம்படுத்தல் முதலியவை இந்தத் திட்டப்பணிகளில் இடம்பெறுகின்றன.
நகரவாசிகளுக்கு மனநிறைவு தருவதை குவாங் ஷோ நகர அரசு முதன்மை பணியாக மேற்கொள்கின்றது. அந்த திட்டப்பணிகளை மேற்கொள்ளும் போது குவாங் ஷோ நகர அரசு மக்களின் கருத்துக்களைக் கேட்டறிந்து செயல்படுவதன் மூலம் பொது மக்களின் கண்காணிப்பை ஏற்றுக்கொள்கின்றது.