16வது ஆசிய விளையாட்டுப் போட்டியின் பரப்புரை ஒத்துழைப்பு பற்றிய உடன்படிக்கையில் கையொப்பமிடும் விழா 9ம் நாள் குவாஞ்சோ மாநகரில் நடைபெற்றது. சீன வானொலி நிலையம் உள்ளிட்ட சீனாவின் 12 முக்கிய செய்தி ஊடகங்கள், ஆசிய விளையாட்டுப் போட்டியின் அமைப்புக்குழுவுடன் உடன்படிக்கையை உருவாக்கி, ஆசிய விளையாட்டுப் போட்டியின் பரப்புரை ஒத்துழைப்பு செய்தி ஊடகங்களாக மாறியுள்ளன.
கம்யூனிஸ்ட் கட்சியின் குவாஞ்சோ மாநகராட்சி நிரந்தர உறுப்பினர் Wang Xiao Ling இவ்விழாவில் உரை நிகழ்த்துகையில், உடன்படிக்கையில் கையொப்பமிட்ட செய்தி ஊடகங்கள் ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு அளிக்கும் ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார். 2010ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் குவாஞ்சோவில் நடைபெறும் 16வது ஆசிய விளையாட்டுப் போட்டி, பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை அடுத்து, சீனாவில் நடைபெறும் இன்னொரு சர்வதேச விளையாட்டு நிகழ்வாகும் என்று அவர் தெரிவித்தார்.