• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன-இலங்கை நட்புறவை ஆழமாக்கும் உலகப் பொருட்காட்சி
  2010-07-19 10:02:55  cri எழுத்தின் அளவு:  A A A   

இலங்கை தேசிய அரங்கு நாள் தொடர்பான கொண்டாட்ட நடவடிக்கைகள், 18ம் நாள் ஷாங்காய் உலகப் பொருட்காட்சியல் நடைபெற்றன. இதற்காக, இலங்கை தலைமை அமைச்சர் டி.எம். ஜெயரட்ன ஷாங்காய் மாநகருக்கு வருகை தந்தார். உலகப் பொருட்காட்சி, இலங்கை-சீன பாரம்பரிய நட்புறவையும் இரு தரப்பிடையே புரிந்துணர்வையும் வலுப்படுத்தும் தலைசிறந்த மேடையாக விளங்குகின்றது. குறிப்பாக, மேலதிக சீன மக்கள் இலங்கையை அறிந்து கொள்ளும் ஒரு ஒளிநிறைந்த சன்னலாகவும் அமைகின்றது. இலங்கை தலைமை அமைச்சர் ஜெயரட்ன எமது செய்தியாளருக்கு அளித்த பேட்டியில், இவ்வாறு தெரிவித்தார்.

ஷாங்காய் உலகப் பொருட்காட்சி தொடர்பான புரிந்துணர்வு பற்றி பேசுகையில், அவர் கூறியதாவது

உலகம் முழுவதுமிலிருந்து மொத்தம் 246 நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகள் இதில் கலந்து கொண்டுள்ளன. இது, உலகின் பல்வேறு நாடுகளின் பண்டைய நாகரிகம், நவீன அறிவு, எதிர்கால வளர்ச்சி ஆகியவற்றை ஒன்றாக கொண்ட தலைசிறந்த மாநாடாக அமைகின்றது. ஒவ்வொரு நாட்டின் வேறுபட்ட கடந்த காலம், வரலாறு, ஒவ்வொரு தேசிய இனத்தின் முன்னேற்றப் போக்கு முதலியவற்றை இங்கே அறிந்து கொள்ளலாம். எனவே, பல்வேறு நாடுகளும் பல்வேறு தேசிய இனங்களும் ஒன்றுக்கு ஒன்று கற்றுக்கொண்டு பயன்படுத்தி, இரு தரப்பிடையே நட்புறவை அதிகரித்து, பார்வையை விரிவாக்கும் இடமாக, உலகப் பொருட்காட்சி திகழ்கின்றது என்று அவர் கூறினார்.

2 ஆண்டுகளுக்கு முன்பாக, மாபெரும் அளவிலான ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை சீனா வெற்றிகரமாக நடத்தியுள்ளது. அது, உலக மக்களது மனங்களில் ஆழப்பதிந்துள்ளது. இப்போது, ஷாங்காய் மாநகரம் உலகப் பொருட்காட்சியை நடத்துவது, உலகின் கவனத்தை மீண்டும் ஈர்த்துள்ளது என்று ஜெயரட்ன தெரிவித்தார். இப்பொருட்காட்சியில், இலங்கை அரசு மிகுந்த கவனம் செலுத்தியுள்ளது. பொருட்காட்சியை ஆதரிப்பதாக உறுதிகூறி, இதில் கலந்து கொள்வதை உறுதிப்படுத்திய முதல் தொகுதி நாடுகளில், இலங்கையும் ஒன்றாகும் என்று அவர் கூறினார்.

பல்வேறு நாடுகள் தங்களது வளர்ச்சி வரலாற்றை வெளிப்படுத்தி, நாட்டின் செல்வாக்கை உயர்த்தும் வாய்ப்புக்கள், உலகப் பொருட்காட்சியில் வழங்கப்படுகின்றன. தவிரவும், அவற்றின் வர்த்தகம் மற்றும் சுற்றுலாத் துறைகளின் வளர்ச்சிக்கு மேலதிக வாய்ப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, இவ்வாண்டு ஜுலை முதல் நாள் தொடக்கம், தலைநகர் கொழும்பு மற்றும் ஷாங்காய் இடையே நேரடி விமானச் சேவை திறந்து வைக்கப்பட்ட பின், இரு நாடுகளிடையே சுற்றுலா மற்றும் வர்த்தகத் தொடர்புகள் பெரிதும் அதிகரித்துள்ளன என்று டி.எம்.ஜெயரட்ன குறிப்பிட்டார்.

இரு தரப்புறவின் தற்போதைய நிலைமை பற்றி, அவர் குறிப்பிட்டபோது,

இரு நாட்டுத் தூதாண்மை உறவு நிறுவப்பட்டு 50 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு துறைகளில் நெருக்கமான நட்பார்ந்த பரிமாற்றமும் ஒத்துழைப்பும் மேற்கொள்ளப்பட்டன. குறிப்பாக, கடந்த சில ஆண்டுகளில், இலங்கைப் பொருளாதார வளர்ச்சிப் போக்கில், சீனா தொடர்ந்து உதவி அளித்து வருகின்றது. இத்தகைய தன்னலமற்ற உதவி, இரு நாட்டு மக்களிடையே நட்புறவை ஆழமாக்குகின்றது என்று அவர் கூறினார்.

புதிய காலத்தில், அரசியல், பொருளாதார வர்த்தகம், சுற்றுலா, பண்பாடு, கல்வி, கலை உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்புகளின் மூலம், இலங்கை-சீன பாரம்பரிய நட்புறவு மேலும் வளர்ச்சியடையும் என்று டி.எம். ஜெயரட்ன இறுதியாகக் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040