மே முதல் நாள் தொடங்கிய உலகப் பொருட்காட்சி, அது நிதானமாகவும் ஒழுங்காகவும் நடைபெற்று வருகிறது. மென்மேலும் அதிக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகள் இதை பார்வையிட விரும்புகின்றனர். ஜுன் 5ம் நாள் நண்பகலில், பயணிகளின் எண்ணிக்கை 1கோடியைத் தாண்டியது. 23 நாட்களுக்கு பின், அதாவது ஜுன் 28ம் நாள் இவ்வெண்ணிக்கை 2 கோடியைத் தாண்டியது.
ஜுலை 5ம் முதல் 20ம் நாள் வரை, நாள்தோறும் ஷாங்காய் உலகப் பொருட்காட்சியைப் பார்வையிடோரின் எண்ணிக்கை தொடர்ந்து 16 நாட்களாக 4 இலட்சத்தைத் தாண்டியது.