16வது ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான 2வது உலக செய்தி ஊடகக் கூட்டம் 20 முதல் 23ம் நாள் வரை, சீனாவின் குவாங்ஷோ மாநகரில் நடைபெறுகின்றது. சுமார் 200 செய்தி ஊடக நிறுவனங்களின் பிரதிநிதிகள் இதில் கலந்துகொள்கின்றனர். ஆசிய ஒலிம்பிக் செயல் குழு, சீனத் தேசிய விளையாட்டு ஆணையம், தேசிய வானொலி, திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி ஆணையம் முதலிய நிறுவனங்களின் சுமார் 40 அலுவலர்களும் இதில் பங்கெடுத்தனர்.
செய்திஊடகங்களுக்கான சேவைத் திட்டத்தை மேலும் மேம்படுத்த வேண்டும். இக்கூட்டத்தின் துவக்க விழாவில், குவாங்துங் மாநிலத்தின் துணைத் தலைவரும், குவாங்ஷோ மாநகரின் நகராட்சித் தலைவரும், குவாங்ஷோ ஆசிய விளையாட்டு ஏற்பாட்டு ஆணையத்தின் துணைத் தலைவருமான wanqingliang இவ்வாறு தெரிவித்தார்.