குவாங் சோ ஆசிய விளையாட்டுப் போட்டியின் ஆயத்தப் பணிகள் இது முடிக்கப்பட்டு விட்டன. தற்போது, அரங்குகள் மற்றும் போட்டிகளின் சோதனை கட்டத்தில் நுழைந்துள்ளது. குவாங்சோ மாநகராட்சி துணைத் தலைவரும் இப்போட்டியின் அமைப்புக் குழுவின் துணைத் தலைமைச் செயலாளருமான xu ruisheng 27ம் நாள் இதைத் தெரிவித்தார்.
நவம்பர் 12ம் முதல், 27ம் நாள் வரை 16வது ஆசிய விளையாட்டுப் போட்டி குவாங்சோவில் நடைபெறவுள்ளது. பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்குப் பின், சீனாவில் நடைபெறும் மற்றொரு பெரிய சர்வதேச விளையாட்டுப் போட்டியாகும்.
போட்டியின் கால அட்டவணைகள் பொதுவாக உறுதிப்படுத்தப்பட்டு விட்டன. சோதனைப் போட்டிகள் திட்டப்படி நடைபெற்று வருகின்றன. அனைத்து விளையாட்டு அரங்குகள் திட்டப்படி பயன்பாட்டுக்கு வரும் என்றும் xu ruisheng அறிமுகப்படுத்தினார்.