• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
தூதாண்மையில் உலகப் பொருட்காட்சியின் வெற்றி
  2010-08-27 18:28:56  cri எழுத்தின் அளவு:  A A A   

இதுவரை, 2010ம் ஆண்டு ஷாங்காய் உலகப் பொருட்காட்சி பொதுத் தூதாண்மையில் மாபெரும் வெற்றிகள் பெற்றுள்ளது. இப்பொருட்காட்சி குறித்து, அமெரிக்காவின் ஆசியச் சங்கம் 26ம் நாள் நியூயார்க் நகரில் நடத்திய ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டபோது, ஷாங்காய் உலகப் பொருட்காட்சியிலுள்ள அமெரிக்க அரங்கின் ஆலோசகக் குழுத் தலைவர் பிராங்கிளின் எல். லாவின் இதைத் தெரிவித்தார்.

ஷாங்காய் உலகப் பொருட்காட்சியில் கலந்துள்ள நாடுகள் அனைத்துக்கும் மதிப்பு அளிக்கப்பட்டது. எல்லா நாடுகளுக்கும் சமமான வெளிப்பாட்டுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. உலகின் பல்வேறு நாடுகளின் நிலைமை பற்றி, சீன மக்கள் இதன் மூலம் நன்றாக புரிந்து கொண்டு வருகின்றனர். அதேவேளை, வெளிநாட்டுப் பயணிகள், சீனா பற்றி மேலதிகமாகவும் நேரடியாகவும் தவறின்றியும் தெரிந்து கொள்ளலாம். இந்த நிலையில், ஷாங்காய் உலகப் பொருட்காட்சி, மிகச் சிறந்த பொதுத் தூதாண்மை வழிமுறையாகும் என்று பிராங்கிளின் தெரிவித்தார்.

மேலும், சீனா மற்றும் அமெரிக்கா இடை மனித வள பரிமாற்றுத்துக்கு முக்கிய மேடையாகவும் இப்பொருட்காட்சி திகழ்கின்றது என்றும் அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040