ஆசிய விளையாட்டுப் போட்டி மற்றும் ஆசிய மாற்று திறனாளிகள் விளையாட்டுப் போட்டியை நடத்துவது, குவாங்துங் மாநிலத்தின் விளையாட்டு இலட்சியத்தின் வளர்ச்சியை விரைவுப்படுத்தும். போட்டி ரீதியான விளையாட்டுகளோ அல்லது பொது மக்கள் கலந்து கொள்ளும் விளையாட்டுகளோ வளர்ச்சியடைவது பெருமளவில் விரைவுப்படுத்தப்படும். குவாங் துங் மாநிலத்தின் விளையாட்டுப் பணியகத்தின் துணைத் தலைவர் வாங் யுபிங் வெள்ளிக்கிழமை இவ்வாறு தெரிவித்தார்.
ஆசிய விளையாட்டுப் போட்டியை நடத்துவதன் மூலம், விளையாட்டு அரங்குகள் உள்ளிட்ட பொது விளையாட்டு வசதிகள் மேலும் மேம்படுத்தப்படும். நகரவாசிகள் விளையாட்டுப் பயிற்சியில் பங்கெடுக்கும் ஊக்கம், பரப்புரை மூலம் அதிகரித்து, விளையாட்டுத் துறை வளர்ச்சியடையும் என்றும் வாங் யுபிங் குறிப்பிட்டார்.