• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான தன்னார்வத் தொண்டர் குழு
  2010-09-18 19:47:36  cri எழுத்தின் அளவு:  A A A   
2010 குவாங் சோ ஆசிய விளையாட்டுப் போட்டி மற்றும் ஆசிய மாற்றுத் திறனுடையோர் விளையாட்டுப் போட்டிக்கான தன்னார்வத் தொண்டர் குழுவின் உருவாக்க விழா 18ஆம் நாள் குவாங் சோ நகரிலுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டி நகரில் நடைபெற்றது.

சுன் யட் சென் பல்கலைக்கழகம், குவாங் சோ அந்நிய மொழி மற்றும் வர்த்தக பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களின் 1900க்கு மேற்பட்ட தொண்டர்கள் இவ்விழாவில் தொண்டர்களுக்கான உறுதிமொழியை கூறினர். விளையாட்டுப் போட்டிக்காலத்தில் அவர்கள் விளையாட்டு வீரர் கிராமத்திலுள்ள பல்வேறு பணிகளில் ஈடுபட்டு, வணிகம், மதம், மொழி உள்ளிட்ட துறைகளில் விளையாட்டு வீரர்களுக்கும் அலுவலர்களுக்கும் சேவை புரிவார்கள்.

ஆசிய விளையாட்டுப் போட்டிக்காலத்தில், ஆசியாவின் 45 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 10 ஆயிரத்துக்கு மேற்ப்பட்ட வீரர்களும் அலுவலர்களும் விளையாட்டு வீரர் கிராமத்தில் தங்கியிருப்பர்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040