• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
நிலவு திருநாளின் கொண்டாட்டம்
  2010-09-22 18:28:12  cri எழுத்தின் அளவு:  A A A   
இன்று சீனாவின் பாரம்பரிய விழாவான நிலவு திருநாளாகும். இதை முன்னிட்டு, சீனாவின் பல்வேறு இடங்களில் பல்வகை கொண்டாட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இவ்வாண்டு பெய்ஜிங்கில் கொண்டாடப்பட்ட நிலவு திருநாளுக்கு முயல் கடவுள் என்ற சின்னம் அதிகமாகக் காணப்பட்டது. முயல் கடவுள், சீனாவின் பாரம்பரியப் பண்பாட்டில் சந்திர மாளிகை மற்றும் வெள்ளை முயல் பற்றிய செவிவழி கதையிலிருந்து வருகிறது. நிலவு திருநாளுக்கான கொடையாகவும் குழந்தைகளின் விளையாட்டுப் பொருளாகவும் அது விளங்குகிறது. கடந்த சில நாட்களில், பெய்ஜிங்கிலுள்ள கடைகளில் முயல் கடவுள் நல்ல விற்பனையாகியுள்ளது. நகரவாசி லீ அம்மையார் கூறியதாவது—

"கடையில் விற்கப்பட்ட மண்ணால் தயாரிக்கப்பட்ட முயல் கடவுள் சிலை பார்ப்பதற்கு வேடிக்கையானது. அதை எளிதாக நம்மோடு வைத்துக் கொள்ள முடியும். நண்பர்களுக்கு அன்பளிப்பாக வழங்க, முயல் கடவுள் சிலைகள் சிலவற்றை வாங்கினேன். இதில் நிலவு திருநாளின் சூழலை நிறைந்து உணரலாம்" என்று அவர் கூறினார்.

நிலவு திருநாள், சீனாவின் 3 மிகப் பெரிய விளக்கு விழாக்களில் ஒன்றாகும். விளக்குகளைக் கண்டு ரசிப்பது, நிலவு திருநாளில் உணரத்தக்க பண்பாட்டு விருந்தாகும். நிலவு திருநாளுக்கு முந்தைய நாளிரவு, ஷாங்காய் Yu Yuan பூங்காவிலுள்ள வணிக நகரில், மாளிகைகளும் கட்டிடங்களும் பல்வகை வண்ண விளக்குகளால் புதிதாகவும் அழகாகவும் அலங்கரிக்கப்பட்டிருந்தன. Chang E நிலவுக்கு பறந்து சென்ற காட்சி, வண்ண விளக்கு ஒளியில் உண்மையாக காணப்படுகிறது. Yu Yuan பூங்கா தேவலோகத்திலுள்ள சந்திர மாளிகையைப் போல் அமைந்திருந்தது.

21ஆம் நாளிரவு, பழமை வாய்ந்த சூ சோ நகரில், இருகரைகளின் நட்புறவு நிறைந்த கலை நிகழ்ச்சி அரங்கேற்றப்பட்டது. தைவானின் புகழ்பெற்ற கவிஞர் Yu Guangzhong நிகழ்ப்பட ஒளிபரப்பின் மூலம் தனது சகாக்களுக்காக ஊர் மீதான நினைவு என்ற தனது கவிதையைப் பாடினார்.

"ஊர் மீதான நினைவு, சிறிய அஞ்சல் தலையாகும். இங்கே நான் இருக்கின்றேன். அங்கே தாய் இருக்கிறார். வயதாகிய பின், ஊர் மீதான நினைவு, மெல்லிய கப்பல் சீட்டாகும். இங்கே நான் இருக்கின்றேன். அங்கே மண மகள் இருக்கிறார்" என்று அவர் கூறினார்.

விழாக்கள் வரும் போதெல்லாம் குடும்பத்தினரை அதிகமாக நினைக்கின்றோம். குடும்பத்தினர் அனைவரும் ஒன்றுகூடி மகிழும் நாளில், குடும்பத்தினருடன் சேர்ந்து நிலாவைக் கண்டு ரசித்து, குடும்பத்தின் அன்பை உணர்வது என்பது மிக இன்பமான ஒன்றாகும். வெளியூரில் இருந்து வீடு திரும்ப முடியாத மக்கள் பலர், தொலைபேசி மற்றும் நிலா கேக் அனுப்புவதன் மூலம் குடும்பத்தினர், உற்றார் உறவினர் மற்றும் நண்பர்களின் மீதான தங்களது நினைவை வெளிப்படுத்துகின்றனர். திரு Bai கூரியதாவது—

"வெளியூரில் வேலை செய்வதால், நிலவு திருநாளின் போது வீடு திரும்ப முடியவில்லை. சில நாட்களுக்கு முன் குடும்பத்தினருக்கு நிலா கேக் மற்றும் அன்பளிப்புகளை அனுப்பினேன். இப்போது வீடு திரும்ப முடியவில்லை என்ற போதிலும் வாழ்த்துக்களைத் தெரிவிக்க வேண்டும்" என்று அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040