2010ஆம் ஆண்டு குவாங்சோ ஆசிய விளையாட்டுப் போட்டியின் துவக்க விழாவின் பன்நோக்க பயிற்சி 30ம் நாள் துவங்குகிறது. இது தொடர்பான ஆயத்தப் பணிகள் முடிவு பெறும்.
ஆசிய விளையாட்டுப் போட்டியின் அரங்குகள் மற்றும் திடல்கள் பயன்பாட்டுக்கு ஒப்படைக்கப்பட்டன.
16வது ஆசிய விளையாட்டுப் போட்டி நவம்பர் 12ம் நாள் சீனாவின் குவாங்சோ நகரில் துவங்கும். ஆசிய நாடுகளைச் சேர்ந்த 11 ஆயிரம் விளையாட்டு வீரர்கள் நடப்புப் போட்டியில் கலந்து கொள்வர். கலந்து கொள்ளும் வீரர்களி்ன் எண்ணிக்கை அதன் வரலாற்றில் மிக அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.