
ஒரு திங்கள் நீடிக்கும் இந்த கலை விழா, உலகப் பொருட்காட்சியில் சேர்ந்து உலகப் பொருட்காட்சிக்கு சேவை புரிய வேண்டும் என்று ஏற்பாட்டுத் தரப்பு தெரிவித்துள்ளது. சீன துணை பண்பாட்டு அமைச்சர் Zhao Shaohua அம்மையார் துவக்க விழாவில் பேசுகையில், கலை மூலம் உலகப் பொருட்காட்சியின் தலைப்பை வெளிப்படுத்தி, ஷாங்காய் உலகப் பொருட்காட்சி வெற்றி பெறுவதற்கு மகிழ்ச்சியான சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்று கூறினார். அவர் கூறியதாவது—
"உலகின் கவனத்தை ஈர்க்கும் உலகப் பொருட்காட்சி ஆண்டில், உலகப் பொருட்காட்சிப் பூங்காவில் மனிதக்குலத்தின் பண்பாடு சிறப்பாக வெளிப்படுத்தப்படுகிறது. இப்பூங்காவின் வெளிப்புறத்தில் ஷாங்காய் சர்வதேச கலை விழா உள்நாடு மற்றும் வெளிநாடுகளின் தலைசிறந்த கலைகளை வழங்குகிறது" என்று அவர் கூறினார்.
இந்த கலை விழாவில் நாடகங்கள், இசை நாடகங்கள், நடனங்கள் உள்ளிட்ட மொத்தம் 45 கலை நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்படும். ஷாங்காய் பாலே நடனக் குழுவினரும் ஆடை வடிவமைப்பாளர் Pierre Cardinனும் இவ்விழாவின் துவக்க நிகழ்ச்சியைக் கூட்டாக உருவாக்கினர். இவ்விழாவின் செய்தியாளர் கூட்டத்தில், ஷாங்காய் பண்பாட்டு ஒலிபரப்பு மற்றும் திரைப்பட நிர்வாகத்தின் தலைவர் Zhu Yonglei இது பற்றி சிறப்பு அறிமுகம் செய்தார்.
"துவக்க நிகழ்ச்சியாக தேர்தெடுக்கப்பட்ட Marco Polo—கடைசி கடமை என்ற பாலே நடனத்தில், சீனா, பிரான்சு, இத்தாலி, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த கலைஞர்களின் அறிவாற்றல் அடங்கும்" என்று அவர் கூறினார்.
பொது மக்களின் கலை நிகழ்ச்சி, ஒவ்வொரு முறையும் கலை விழாவின் முக்கிய பகுதியாக அமைகிறது. பொது மக்களுக்கும் கலைகளுக்கும் இடை தொலைவைக் குறைப்பதோடு, கலையின் பயன்களை பொது மக்கள் அனுபவிக்கவும் செய்துள்ளது. அழகான அரங்கில் அருமையான வாழ்க்கை என்ற தலைப்பிலான இந்த பொது மக்களின் கலை நிகழ்ச்சியில், பல நிலையிலான உள்நாட்டு வெளிநாட்டு பண்பாட்டுப் பரிமாற்றம் மேற்கொள்ளப்படும். பல்வகைத் தன்மை வாய்ந்த பொது மக்களின் தார்மீக பண்பாட்டுத் தேவை நிறைவு செய்யப்படும்.
நடப்பு கலை விழாவுக்காக புதிதாக உருவாக்கப்படும் 2010 சர்வதேச கலை விழா கருத்தரங்கு, இவ்விழாவின் புதிய பகுதியாக செப்டெம்பர் 25ஆம் நாள் துவங்கியது. செப்டெம்பர் 29ஆம் நாள் நிறைவடையும் இக்கருத்தரங்கின் தலைப்பு, விழாவுக்கான நடவடிக்கையும் நகரமும் என்பதாகும். இக்கருத்தரங்கு, ஆசிய மற்றும் ஐரோப்பிய கலைத் துறையின் சிறப்பு பிரமுகர்களுக்கு பேச்சுவார்த்தை மேடையை உருவாக்கியுள்ளது.
அதனுடன், 12 உள்நாட்டு வெளிநாட்டு கலை கண்காட்சிகள் இவ்விழா காலத்தில் நடைபெறும். தவிரவும், 4 நாட்கள் தொடரும் அரங்கேற்றப் பொருட்காட்சி, உள்நாட்டு வெளிநாட்டு கலைப் பரிமாற்றம் மற்றும் வர்த்தகத்துக்கு மேலும் பெரியதொரு மேடையை உருவாக்கும்.