• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவின் அறிவாற்றலை வெளிப்படுத்தும் சீன அரங்கு
  2010-09-30 11:23:13  cri எழுத்தின் அளவு:  A A A   
அக்டோபர் முதல் நாள், அதாவது சீன மக்கள் குடியரசின் தேசிய விழா நாளன்று, ஷாங்காய் உலகப் பொருட்காட்சியில் சீன அரங்கு நாளை வரவேற்க தயாராகி வருகிறது. செப்டெம்பர் 29ஆம் நாள் பிற்பகல் சீன அரங்கு நாளின் செய்தியாளர் கூட்டம் ஷாங்காய் உலகப் பொருட்காட்சி மையத்தில் நடைபெற்றது. சீன அரங்கின் தலைவர் Xu Hubin, துணைத் தலைவர் Qian Zhiguang முதலியோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு, சீன அரங்கின் செயல்பாடு மற்றும் சீன அரங்கு நாளுக்கான நடவடிக்கைகள் பற்றி அறிமுகப்படுத்தினர்.

உலகப் பொருட்காட்சியின் உபசரிப்பு நாட்டின் அரங்காக, சீன அரங்கு தனது ஆயத்தப் பணியைத் துவக்கியதிலிருந்து பல்வேறு தரப்புகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. தனிச்சிறப்புடைய கட்டிட வடிவத்தைத் தவிர, சீன தேசத்தின் நாகரிகத்தை வெளிப்படுத்தி, நகர வளர்ச்சியில் சீன அறிவாற்றல் என்ற தலைப்பை சிறப்பாக விளக்குவது, சீன அரங்கின் மேலும் பெரும் ஈர்ப்பு ஆற்றலாகும்.

சீன அரங்கின் தலைவர் Xu Hubin கூறியதாவது—

"வெளிப்புறத்தின் கட்டிட வடிவம் மற்றும் உட்புறத்தின் காட்சி அம்சங்களில், நவீன அறிவியல் மற்றும் சீன பாரம்பரிய அறிவாற்றலின் புத்தாக்கமும் அவற்றின் இணைப்பும் நனவாக்கப்பட்டுள்ளன. இது, உள்நாடு மற்றும் வெளிநாடுகளின் விருந்தினர்கள், நிபுணர்கள் மற்றும் பார்வையாளர்களின் வெகுவான பாராட்டுகளைப் பெற்றுள்ளது" என்று அவர் கூறினார்.

அதனுடன், எரியாற்றலை சிக்கனப்படுத்தி சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் புதிய தொழில் நுட்பங்களைப் பயன்படுத்திய சீன அரங்கு, கரி குறைப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, தொடரவல்ல வளர்ச்சி ஆகிய மனிதக்குலம் அக்கறை செலுத்தும் பிரச்சினைகள் பற்றிய சீனாவின் செயலாக்க மனநிலையையும் அவற்றில் ஈடுபடும் மன உறுதியையும் வெளிப்படுத்தியுள்ளது.

சீன அரங்கின் துணைத் தலைவர் Qian Zhiguang பேசுகையில், சீன அரங்கின் பணிக் குழு நடைமுறையின் தேவைக்கிணங்க, வரவேற்பு ஆற்றலையும் சேவைத் தரத்தையும் மேம்படுத்தி வருகிறது என்று தெரிவித்தார். அவர் கூறியதாவது—

"பார்வையாளரின் ஒழுங்கு மற்றும் பயணத்தின் தரத்தை உறுதிப்படுத்தவும், அதிகரித்து வரும் பார்வையாளரின் தேவையை நிறைவு செய்யவும், சீன அரங்கு வசதிகள் மற்றும் சேவைப் பணியை மேம்படுத்தியுள்ளது" என்று அவர் கூறினார்.

அக்டோபர் முதல் நாள், ஷாங்காய் உலகப் பொருட்காட்சி, நவ சீனா நிறுவப்பட்ட 61வது ஆண்டு நிறைவு நாளில் சீன அரங்கு நாளை வரவேற்கவுள்ளது. உலகப் பொருட்காட்சியின் முக்கிய சிறப்பு நடவடிக்கைகளில் ஒன்றான சீன அரங்கு நாள், சீன தோற்றத்தை வெளிப்படுத்தி, சீனப் பண்பாட்டைப் பரப்புரை செய்து, சீன எழுச்சியை வெளிக்கொணரும் முக்கிய காரணியாக இருக்கிறது. சீனத் தலைவர்கள், சர்வதேச கண்காட்சி ஆணையத்தின் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட உள்நாட்டு வெளிநாட்டு விருந்தினர்கள் தொடர்பான நடவடிக்கையில் கலந்து கொள்ள உள்ளனர். சீன அரங்கு நாளன்று, அரங்கு நாள் விழா, அரங்கில் விருந்தினரின் சுற்றுப் பயணம், கலை நிகழ்ச்சிகள் முதலிய கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும். சீன அரங்கை பார்வையிடும் சாதாரண பயணிகளுக்காக, சிறப்பான நடவடிக்கைகள் பல மேற்கொள்ளப்படும்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040