
தற்போதைய உலகில், 50 விழுக்காட்டுக்கும் அதிகமானோர் நகரங்களில் வாழ்கின்றனர். நகரம், மனித குலத்தின் முக்கிய தாயகமாக நாளுக்கு நாள் மாறி வருகிறது. "நகரமும், வாழ்க்கையும்" என்பது தான் 2010ஆம் ஆண்டு ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் தலைப்பாகும்.
சீனத் தேசிய மக்கள் பேரவை நிரந்தர கமிட்டியின் துணை தலைவர் Lu Yong Xiang 6வது சிறப்பு கருத்தரங்கின் துவக்க விழாவில் கலந்து கொண்டார். அவர் கூறியதாவது:
"'மேம்பட்ட நகரம், மேம்பட்ட வாழ்க்கை' என்ற தலைப்பு, எதிர்கால நகரங்களில் உள்ள அருமையான வாழ்க்கை மீது மனித குலம் கொண்டுள்ள ஆசையையும், எதிர்பார்ப்பையும் வெளிப்படுத்தியுள்ளது. உலகளவில் உள்ள நகரங்களின் பல்வகை பண்பாடுகள் மற்றும் பல்வகைத்தன்மையின் வளர்ச்சிக்கு பரிமாற்றம் மேற்கொள்ளும் மேடையை ஷாங்காய் உலகப் பொருட்காட்சி வழங்கி, எதிர்காலத்தில் இணக்கமான நகரம் மற்றும் உகந்த வாழ்க்கை மாதிரிகளை காட்டியுள்ளது" என்றார், அவர்.
10க்கும் அதிகமான நாடுகளைச் சேர்ந்த, அரசு மற்றும் சர்வதேச நிறுவனங்களின் பிரதிநிதிகள், நகரத் திட்ட வரைவு மற்றும் கட்டிட நிபுணர்கள், தொழில் முனைவோர் ஆகியோர் என 60 பேர் நடப்பு கருத்தரங்கில் கலந்து கொள்கின்றனர். இணக்கமான நகரங்களின் தீர்மான காரணிகள் மற்றும் வளர்ச்சி தடைகள் பற்றி அவர்கள் விவாதித்து, நகரங்களின் கட்டுமானத்துக்கு தேவைப்படும் தொழில் நுட்பங்கள், கொள்கைகள், இலக்குகள், நெடுநோக்கு திட்டங்கள் முதலியவை பற்றி யோசனை அளிக்கிறார்கள்.
இணக்கம், சீனப் பண்பாட்டில் ஒரு முக்கிய அம்சமாகும். சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணி நடைமுறைக்கு வந்துள்ள 30 ஆண்டுகளில், ஒருங்கிணைப்பான வளர்ச்சி, மூல வளத்தின் சிக்கனப் பயன்பாடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மக்களின் வாழ்க்கையின் மேம்பாடு மற்றும் உத்தரவாதம் ஆகியவற்றில் சீன அரசு கவனம் செலுத்தி வருகிறது. நடப்பு கருத்தரங்கு நடைபெற்ற இடமான Hang Zhou, இணக்கமான நகரமும், உகந்த வாழ்க்கையும் என்ற கருத்தை செயல்படுத்தும் மாதிரியாக திகழ்கிறது. இத்துறையில் Hang Zhou நகர அரசு மேற்கொண்டுள்ள முயற்சியை ஐ.நா மனித உறைவிட அலுவலகத்தின் செயல் தலைவர் Inga Bjork-Klevby பாராட்டினார். அவர் கூறியதாவது:
"Hang Zhou நகர் நல்ல எடுத்துக்காட்டுகள் தந்துள்ளது. Xi Hu ஏரி கரையில் நடந்து சென்றால், இந்நகரம் மனித உறைவிடத்துக்கு ஏற்றது என்று எளிதில் கண்டு கொள்ளலாம்" என்றார், அவர்.