
ஆசிய விளையாட்டுப் போட்டியின் போது, 40 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 14 ஆயிரம் விளையாட்டு வீரர்களும், அதிகாரிகளும், 7000க்கும் அதிகமான செய்தியாளர்கள், ஆயிரக்கணக்கான வெளிநாட்டுப் பயணிகள் ஆகியோர் குவாங் சோவுக்கு வருவர். குவாங் சோ மாநகரின் போக்குவரத்தைப் பொறுத்த வரை, இது பெரிய சவாலாகும். ஆனால், இப்பிரச்சினையைச் சமாளிக்க, குவாங்சோ மாநகரில் ஆயத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஆசிய விளையாட்டுப் போட்டி துவங்குவதற்கு முன், குவாங் சோவில் 6 சுரங்க இருப்புப்பாதை தடங்கள் போக்குவரத்துக்குத் திறந்து வைக்கப்படும். அப்போது, குவாங் சோவில் போக்குவரத்துக்கு திறந்து விடும் சுரங்க இருப்புப்பாதை தடங்களின் மொத்த நீளம், 200 கிலோமீட்டரைத் தாண்டும். தொடர் வண்டிகள், 80 விழுக்காட்டுக்கு மேலான விளையாட்டு அரங்குகள் மற்றும் திடல்களுக்குச் செல்ல முடியும். ஆசிய விளையாட்டுப் போட்டி நடைபெறும் போது, போக்குவரத்து வாரியம் சில பேருந்து தடங்களையும் அதிகரிக்கும் என்று குவாங்சோ மாநகர போக்குவரத்து கமிட்டியைச் சேர்ந்த அதிகாரி Zhang Zhi Xin தெரிவித்தார். அவர் கூறியதாவது:
"தற்காலிக தடங்கள் திறந்து வைக்கப்படும். தவிர, சில பேருந்துகள் இயங்கும் நேரம் நீட்டிக்கப்படும். ஆசிய விளையாட்டுப் போட்டியின் போது, ஆயிரம் பேருந்துகள் புதிதாக அதிகரிக்கப்படும்" என்றார் அவர்.
முன்னேறிய தகவல்மயமாக்க முறைமை, பொது போக்குவரத்து சேவையை மேம்படுத்துவதற்கு ஓர் ஆதாரமாக திகழ்கிறது. ஆசிய விளையாட்டுப் போட்டியின் போது போக்குவரத்து ஒழுங்கினை உத்தரவாதம் செய்யும் பொருட்டு, "குவாங் சோ புத்திசாலித்தன போக்குவரத்து" என்ற அலுவல் குவாங் சோ மாநகரில் நடைமுறைக்கு வரும். இம்முறைமை, விளையாட்டுப் போட்டியின் போது, போக்குவரத்துக்கு வழிகாட்டி பங்காற்றும்.
2005ஆம் ஆண்டு முதல், குவாங்சோ மாநகரில் "வாகனங்களின் புகைமாசு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தும் விதிகள்" திருத்தப்பட்டுள்ளன என்று குவாங் சோ மாநகர சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையத்தைச் சேர்ந்த அதிகாரி Li விவரித்தார். அவர் கூறியதாவது:
"இது வரை, 90 விழுக்காட்டுக்கும் அதிகமான பேருந்துகளில், தூய்மையான எரியாற்றல் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆசிய விளையாட்டுப் போட்டி துவங்குவதற்கு முன், ஏனைய 200 பேருந்துகளில், தூய்மையான எரியாற்றல் பயன்படுத்தப்படும். அப்போது பேருந்துகளின் புகை மாசு வெளியேற்றத்தினால் ஏற்படும் சூழல் பிரச்சினை தீர்க்கப்படும்" என்றார் அவர்.