சீன அரசு தலைவர் ஹுசிந்தாவ் தீபக்கோலில் தீபத்தை ஏற்றி தீபத் தொடரோட்டத்தின் துவக்கத்தை அறிவித்தார்.
இன்று பெய்ஜிங்கில் நடைபெறும் தீபத் தொடரோட்டத்தில் 16 பேர் கலந்து கொள்கின்றனர். முதலாவது ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் தங்கப் பதக்கத்தைப் பெற்ற சீன வீரர் xu haifeng,துப்பாக்கி சுடுதல் சாம்பியன் Yangling முதலியோர் அவர்களில் இடம்பெறுகின்றனர்.
பெய்ஜிங்கிலிருந்து புறப்படும் இத்தீபத் தொடரோட்டம் குவாங்துங் மாநிலத்தின் சில நகரங்கள் உள்ளிட்ட சீனாவின் 21 நிகரங்களில் 30 நாட்களாக நடைபெறும். இறுதியில் குவாங்சோ நகரை சென்றடையும் தீபம், நவம்பர் 12ம் நாள் ஆசிய விளையாட்டுப் போட்டியின் துவக்க விழா நடைபெறும் விளையாட்டு அரங்கிலுள்ள பெரிய தீபத்தை ஏற்ற பயன்படுத்தப்படும்.