• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
தீபத் தொடரோட்டத்தின் துவக்க விழா
  2010-10-12 16:24:42  cri எழுத்தின் அளவு:  A A A   

16வது ஆசிய விளையாட்டுப் போட்டி துவங்குவதற்கு இன்னும் ஒரு திங்கள் காலம் இருக்கின்றது. ஆசிய விளையாட்டு எழுச்சியை அடையாளப்படுத்தும் தீபமேற்று விழா மற்றும் தீபத் தொடரோட்டத்தின் துவக்க விழா 12ம் நாள் முற்பகல் பெய்ஜிங் சொர்க்கக் கோயிலின் தெற்கு சதுக்கத்தில் நடைபெற்றது.
 
பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி வெற்றிகரமாக நடைபெற்ற பின் சீனாவில் நடைபெறும் இன்னொரு பன்னோக்கத் தன்மை வாய்ந்த சர்வதேச விளையாட்டு விழாவாக குவாங்சோ ஆசிய விளையாட்டு போட்டிக் கருதப்படுகின்றது. தீபம் ஏற்றும் விழாவில் சீனத் தேசிய விளையாட்டுப் பொது ஆணையத்தின் தலைவர் liu peng கூறியதாவது. இன்று சீன தேசத்தின் மகத்தான விவேகத்தை அடையாளப்படுத்தும் தியென் தான் சொர்க்கக் கோயிலில் ஆசிய விளையாட்டுத் தீபம் ஏற்றப்பட்டது. வரும் நாட்களில் பெய்ஜிங், ஹார்பின், சான்ச்சுங், சாந்துங் மாநிலத்தின் ஹையாங் மற்றும் குவாதுங் மாநிலத்தின் பல்வேறு நகரங்களில் தீபத் தொடரோட்டம் நிறைவேற்றப்படும் என்றார் அவர்.
 

ஆசிய ஒலிம்பிக் செயல் மன்றத்தின் தலைவர் Ahmed Fahd தீபம் ஏற்றும் விழாவில் கலந்து கொண்டார். விளையாட்டு ஆற்றல் வலிமையானது. பன்னாடுகளின் மக்களிடையிலுள்ள புரிந்துணர்வு மற்றும் நட்பை இது வலுப்படுத்த முடியும் என்று அவர் விளையாட்டுப் போட்டியை மதிப்பிட்ட போது கூறினார்.
சொர்க்கக் கோயிலின் சதுக்கத்தில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுத் தீபத்தொடரோட்ட விழாவில் சீன அரசுத் தலைவர் ஹுச்சிந்தாவ் ஆசிய விளையாட்டுப் போட்டியின் தீபத்தை முதலில் ஏற்றியதோடு சீனாவின் புகழ் பெற்ற உலக நீச்சல் சாம்பியன் பட்டம் பெற்ற வீரர் zhang linனிடம் அதை ஒப்படைத்தார். 16வது குவாங்சோ ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான தீபத் தொடரோட்டம் துவங்குவதென அரசுத் தலைவர் ஹுச்சிந்தாவ் அறிவித்தார்.
 
தீபத் தொடரோட்டத்தில் விளையாட்டு வீரர் zhang linன் முகம் இந்த தீபத்தை முதலில் ஏந்திய பெருமிதத்தில் இன்பமான புன்னகை பூத்து காணப்படுகின்றது. அவர் கூறியதாவது. எனக்கு மிகவும் மகிழ்ச்சி. நான் தீபத்தை பிடிக்கும் முதல் மனிதராக பெருமைப்படுகின்றேன். நாம் மிகவும் அதிர்ஷ்டசாலியாகியுள்ளேன் என்றார் அவர்.
 
zhang lin தவிர சமூகத்தின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 15 பிரமுகர்கள் இன்றைய தீபத் தொடரோட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040