
குவாங்சோ ஆசிய விளையாட்டு அரங்கின் மேற்பகுதி ஒழுங்கற்ற அரைவட்ட வடிவில் வடிவமைக்கப்பட்டதால், அதன் கட்டுமானப் பணி மிகவும் சிக்கலானது. வேலைப்பாடுடைய வெளித்தோற்றம் மற்றும் சிக்கலான செய்முறையால் இவ்வரங்கிற்கு ஆசிய விளையாட்டுப் போட்டியின் முதலாவது அரங்கு என்ற பெருமை சேர்க்கப்படுகிறது.
இவ்வரங்கின் வடிவமைப்பு சீராக உள்ளது. உள்ளே அனைத்து ஊடுவழிகளிலும் தடையில்லா வசதிகள் பொருத்தப்பட்டுள்ளன. உயர் தொழில் நுட்பப் பொருட்கள் மற்றும் முன்னேறிய தொழில் நுட்பங்களின் பயன்பாடு இவ்வரங்கின் மிகப் பெரிய தனிச்சிறப்பாகும். அதன் உட்புற மற்றும் வெளிப்புறச் சூழல் இதனால் தூய்மைப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வரங்கின் பணிக் குழுத் தலைவர் Wu Rixiu கூறியதாவது—
"கண்ணாடி கட்டமைப்பை இவ்வரங்கு பயன்படுத்துகிறது. இரண்டு அடுக்கு கண்ணாடிகளுக்கிடையில் ஓரளவு காற்று இருக்கிறது. ஒலி தடுக்கப்படும் அதேவேளை தட்பவெப்பமும் நிலைநிறுத்தப்படும். மேலும் இந்த கண்ணாடி எளிதில் உடையாது" என்று அவர் கூறினார்.
மழை நீர் சேகரிப்பு தான், குவாங்சோ ஆசிய விளையாட்டு அரங்கின் மேற்பகுதி அரைவட்டத்தில் வடிவமைக்கப்படுவதற்கு காரணம் என்று தெரிகிறது. கூரையில் பொருத்தப்பட்ட சிறப்பான குழாய்கள் மூலம் மழை நீர் சேகரிக்கப்பட்டு, நீர்த்தேக்கதில் சேமிக்கப்படும். ஆசிய விளையாட்டுப் போட்டியின் அரங்கின் வெளியேயுள்ள தாவரங்களுக்கு இது பயன்படுத்தப்படும்.
அரங்கின் வெளியே குப்பையை ஏற்றிச்செல்லும் பாரவண்டியும் குப்பைத் தொட்டியும் ஒன்றுமில்லை என்பது, இவ்வரங்கின் மற்றொரு தனிச்சிறப்பாகும். இது வடிவமைப்பின் குறைபாடு இல்லை. முன்னேறிய ஒரு சாதனம் சிறந்த பங்காற்றியுள்ளது. இது பற்றி Wu Rixiu கூறியதாவது—
"பணியாளர்கள் குப்பைகளைச் சேகரித்த பின், குறிப்பிட்ட ஒரு சேகரிப்பு தொட்டியில் எறிகின்றனர். அதன் கீழ் குப்பைகள் சேகரிக்கப்படும் இடமாகும். பணியாளர்கள் எளிதாக குப்பைகளை குறிப்பிட்ட அவ்விடத்துக்கு ஏற்றிச்செல்லலாம்" என்று அவர் கூறினார்.
பசுமையமாக்கச் சாதனம், இயற்கைக் காற்றோட்டம், சூரிய ஒளி, மழை நீர் பயன்பாடு முதலிய எரியாற்றலைச் சிக்கனப்படுத்தும் புதிய தொழில் நுட்பங்களை ஒட்டுமொத்தமாக பயன்படுத்தியதால், குவாங்சோ ஆசிய விளையாட்டு அரங்கின் எரியாற்றல் சிக்கன விகிதம் 60 விழுக்காட்டை எட்டியுள்ளது. உள்நாட்டிலுள்ள பெரிய ரக விளையாட்டு அரங்குகளில் அதன் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிலை முன்னணியில் இருக்கிறது. தற்போதைய நிலைமைப்படி, இந்த அரங்கு 100 ஆண்டுகாலத்துக்கு பயன்படுத்தப்படலாம்.