• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஒரு புதிய குவாங்சோ நகரம்
  2010-10-14 10:33:05  cri எழுத்தின் அளவு:  A A A   

2010 குவங்சோ ஆசிய விளையாட்டுப் போட்டி மற்றும் மாற்று திறனாளிகளின் விளையாட்டுப் போட்டி பற்றி, 13ம் நாள் சீன அரசவை செய்தி அலுவலகம் செய்தியாளர் கூட்டத்தை நடத்தியது. இதுவரை, விளையாட்டு அரங்குகளின் கட்டுமானங்கள் முடிவடைந்துள்ளன. போட்டிகளை நடத்துவதன் ஆயத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று இப்போட்டியின் செயல்குழுவின் துணைத் தலைவர் wan qingliangகூறினார்.

ஆசியாவின் 45 நாடுகள் மற்றும் பிரதேசங்களின் சுமார் 14 ஆயிரம் விளையாட்டு வீரர்களும் அலுவர்களும் இப்போட்டிக்கு வருவர். 53 போட்டி அரங்குகள் மற்றும் 17 பயிற்சி அரங்குகளின் கட்டுமானங்கள் மற்றும் புனரமைப்பு பணிகள் முடிவடைந்துள்ளன. 42 சோதனை போட்டிகளும் 5 மாற்று திறானிகளின் சோதனை போட்டிகளும் சுமூகமாக நடத்தப்பட்டன. அவற்றின்படி பல்வகை அவசர நிலையைச் சமாளிக்கும் முன்னெச்சரிக்கை திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. இது பற்றி, குவாங்சோ ஆசிய விளையாட்டுப் போட்டியின் செயல்குழுவின் துணை தலைவர் yang shu'an கூறியதாவது

ஆசிய விளையாட்டுப் போட்டி, ஆசியாவின் பன்நோக்க போட்டியாகும். எனவே, பல்வேறு போட்டிகளின் விதிகளுக்கு ஏற்ப பணிகள் நிறைவேர்றப்பட வேண்டும். அது மட்டுமல்ல, செயற்குழு வகுக்கின்ற பல்வகை கொள்கைகளுக்கும் வரையறைகளுக்கும் ஏற்றதாகவும் அவை இருக்க வேண்டும். இச்சோதனை போட்டிகள் மூலம், செயல்குழுவின் தலைமை பண்புகளை நன்றாகவே சோதனை செய்ய முடியும். பிரச்சினைகளை விரைவாக சமாளிக்கும் திறனையும் சோதிக்க முடியும் என்று அவர் கூறினார்.

தவிர, போக்குவரத்து பிரச்சினை, உள்நாட்டு மற்று வெளிநாட்டு செய்தி ஊடகங்கள் கவனம் செலுத்துகின்ற பிரச்சினையாகும். ஆசிய விளையாட்டு போட்டியின் போது, வாகனங்களின் ஒற்ற மற்றும் இரட்டை எண்களின் அடிப்படையில் நாள்தோறும் சுமார் பாதியளவு வாகனங்கள் கட்டுப்படுத்தப்பட இருக்கின்றன. போட்டிகளுக்கு செல்லும் வாகனங்களுக்கு சிறப்புப் பாதைகள் வகுக்கப்படும். 6000க்கு மேலான வாகனங்கள், போட்டிக்காக மட்டும் சேவை புரியவுள்ளன.

2004ம் ஆண்டில் ஆசியவிளையாட்டுப் போட்டியை நடத்தும் உரிமையை குவாங்சோ பெற்ற பின், இந்நகரம், காற்று, நீர், போக்குவரத்து, வசிப்பிடம் முதலிய சுற்றுச்சூழலை மேம்படுத்தி வந்துள்ளது. Wang qingliangமேலும் கூறியதாவது

ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி, புதிய பெய்ஜிங்கை உருவாக்கியது. உலகப் பொருட்காட்சி, புதிய ஷாங்காயை உருவாக்கியுள்ளதுது. ஆசிய விளையாட்டுப் போட்டி, புதிய குவாங்சோவை உருவாக்குவது திண்ணம். இப்போட்டி மூலம், நகரவாசிகளுக்கு புதிய வாழ்க்கை நிலையை உருவாக்கி புதிய வாழ்க்கையின் தேவைக்கு வழிகாட்டி, புதிய வாழ்க்கையின் சுவையை உயர்த்துவோம் என்று அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040