சீனாவின் குவாங்சோ மாநகரில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு, மொத்தம் 12ஆயிரம் கோடி யுவான் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக, அதன் நகராட்சித் தலைவர் வான் ச்சிங் லியாங் 13ம் நாள் தெரிவித்தார்.
ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் அரங்குகள் மற்றும் திடல்களின் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு, விளையாட்டுகளின் ஏற்பாடுகள், நகரச் சுற்றுச்சூழல் மேம்பாடு உள்ளிட்ட துறைகளுக்கு இந்த நிதித்தொகை முக்கியமாக பயன்படுத்தப்பட்டன என்று வான் ச்சிங்லியாங் கூறினார்.
அடுத்த திங்கள் நடைபெறவுள்ள இந்த விளையாட்டுப் போட்டிக்கு, 70 விளையாட்டு அரங்குகள் மற்றும் திடல்கள் தேவைபடுகின்றன. இவற்றில் புதிதாக கட்டியமைக்கப்பட்ட அரங்குகள் மற்றும் திடல்களின் எண்ணிக்கை 12. இதர 58 அரங்குகள் மற்றும் திடல்கள் மாற்றியமைக்கப்பட்டன அல்லது விரிவாக்கப்பட்டன.