பன்னோக்க விளையாட்டு அரங்கு
6 ஆண்டுகளுக்கு மேலான சீரான முயற்சியின் பலனாக, குவாங்சோ 2010ம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டி, ஆசிய மாற்றுத்திறனாளிகள் விளையாட்டுப் போட்டி ஆகியவற்றின் ஆயத்தப் பணி விரைவில் பன்முகங்களிலும் முடிவடையும்.
ஆசியாவின் 45 நாடுகள் மற்றும் பிரதேசங்களின் ஒலிம்பிக் குழுக்களின் பெயர் பதிவு விண்ணப்பங்களை குவாங்சோ விளையாட்டுப் போட்டி பெற்றுள்ளது. இதில் கலந்து கொள்ளும் விளையாட்டு வீரர்களின் எண்ணிக்கை, சுமார் 10 ஆயிரத்து 156 ஆகும். ஆசிய மாற்றுத்திறனாளிகள் விளையாட்டுப் போட்டிக் கமிட்டியின் 41 உறுப்பினர்களில் 39 நாடுகள் மற்றும் பிரதேசங்களின் மாற்றுத்திறனாளிகள் விளையாட்டுப் போட்டிக் குழுக்கள் பெயர் பதிவு விண்ணப்பங்களை முன்வைத்துள்ளன. 17ம் நாள், இவ்விரு விளையாட்டுப் போட்டிகளுக்கான பணிக் கூட்டத்திலிருந்து இத்தகவல் கிடைத்தது.