2009ம் ஆண்டின் மே திங்களில் இலங்கையின் உள்நாட்டு போர் முடிவடைந்த பின், வடக்கு மற்றும் கிழக்குப் பிரதேசங்களின் மறுசீரமைப்புப் பணி விரைவாக நடைபெற்று வருகிறது. நாட்டின் சமூகப் பொருளாதாரம் நிதானமாக வளர்ந்து வருகிறது. இப்பின்னணியில், சீன அரசும் தொழில்நிறுவனங்களும் இலங்கையில் முக்கிய பங்காற்றி வருகின்றன.
சீன இலங்கை உறவு குறித்து பேசுகையில், இரு நாடுகள் நீண்டகால ஆழமான நட்புறவை நிலைநிறுத்துகின்றன என்று இலங்கை பொருளாதார வளர்ச்சித் துறை அமைச்சர் பேசில் ராஜாபாக் ஷே தெரிவித்தார்.
இலங்கை ஒரே சீனா என்ற கொள்கையை உறுதியாக ஆதரிக்கிறது. சர்வதேச கருத்தரங்குகளில் இரு நாடுகள் ஒன்றுக்கு ஒன்று ஆதரவளிக்கின்றன. வளர்ச்சியில், இலங்கைக்கு மிக அதிக உதவி வழங்கும் நாடு, சீனாவாகும். பல்வேறு துறைகளில் சீனா எமக்கு உதவி வழங்கி வருகிறது. இரு நாடுகள், சீரான வர்த்தக உறவையும் பண்பாட்டுப் பரிமாற்றத்தையும் நிலைநிறுத்தி வருகின்றன என்று அவர் கூறினார்.
சீன Dianke சர்வதேச தொழில்நிறுவனம், தற்போது இலங்கையில் உள்ளூர் மருத்துவமனைகளின் கட்டுமானத்துக்கு பொறுப்பேற்கிறது. அங்குள்ள துணை முதன்மைப் பிரதிதிநிதி cai yang கூறியதாவது
இலங்கையின் வடகிழக்கு பிரதேசம் இத்திட்டத்தின் முக்கிய இலக்கு பிரதேசமாகும். 30 ஆண்டு காலத்துக்கு மேல் நீடித்த போரினால் அங்குள்ள அடிப்படை வசதிகள் சீர்குலைக்கப்பட்டன. மருத்துவ மூலவளம் பற்றாக்குறையாக உள்ளது. எனவே, இலங்கை மக்களின் மருத்துவத் தேவையை நிறைவு செய்ய, மருத்துவமனைகளின் கட்டுமானத்தில் ஈடுபட்டு உள்ளூர் மக்களுக்கு நலன் தர முயன்று வருகிறோம் என்று அவர் கூறினார்.
சீன dianke தொழில்நிறுவனத்தின் திட்டம் மிக முக்கியமானது. பெரிதாக்கப்படும் மருத்துவமனையும் முன்னேறிய வசதிகளும், இலங்கையின் வடகிழக்குப் பகுதி மக்களின் மருத்துவ தேவையை நிறைவு செய்ய முடியும் என்று இலங்கை சுகாதார அமைச்சர் மைத்ரிபால சிரிசேனா தெரிவித்தார்.
மருத்துவமனை தவிர, இந்நிறுவனம், கொழும்பு குடும்ப நலவாழ்வு குடியிருப்புக் கட்டுமானத்திலும் ஈடுபட்டுள்ளது. குறைந்த வருமானமுடைய குடும்பங்களுக்கு 65 ஆயிரம் வீடுகளைக் கட்டியமைத்து தொடர்புடைய வசதிகளை இந்நிறுவனம் வழங்கும். தவிர, இலங்கை மக்களின் மின்னணு அடையாள அட்டையை உருவாக்கும் திட்டத்தில் இந்நிறுவனம் கலந்து கொண்டுள்ளது.
இலங்கையின் வளர்ச்சிக்காக சீன தொழில்நிறுவனங்கள் ஆற்றிய பங்கு, அரசு மற்றும் மக்களால் பரந்தளவில் பாராட்டப்படுகிறது. சீன தொழில்நிறுவனங்கள் இலங்கையில் முதலீடு செய்வதை வரவேற்பதாக அமைச்சர் பேசில் ராஜாபக்ஷே தெரிவித்தார்.






அனுப்புதல்












