சீனாவின் சிச்சுவான் மாநிலத்தின் வோலுங் மண்டலத்திலுள்ள பாண்டா பாதுகாப்பு மற்றும் ஆய்வு மையத்தில் பிறந்து வளர்ந்த 6 பாண்டாகள், குவாங்சோ நகரிலுள்ள பான்யு மாவட்டத்தின் வன விலங்கு உயிரியல் பூங்காவுக்கு அக்டோபரின் இறுதியில் அனுப்பப்படும். குவாங்சோ நகரில் நடைபெறவுள்ள 16வது ஆசிய விளையாட்டியின் பார்வையாளர்களுக்காக, அவை அங்கு அனுப்பப்படுகின்றன. அந்த மையத்திலிருந்து 25ம் நாள் கிடைத்த தகவல் இதைத் தெரிவித்தது.