குவாங்சோ ஆசிய விளையாட்டுப் போட்டியின் பன்னாட்டு மொழி சேவை மையம் 24ம் நாள் குவாங் துங் அயல் மொழி மற்றும் வர்த்தக பல்கலைக்கழகத்தில் அதிகாரப்பூர்வமாக இயங்க துவங்கியுள்ளது.
குவாங்சோ ஆசிய விளையாட்டுப் போட்டியின் போது, இப்பன்னாட்டு மொழி சேவை மையம், ஆங்கிலம், ரஷியன், கொரியன், ஜப்பானியம், கம்போடிய மொழியான கமீர், வியட்நாமி, அரபி, தாய், பஹாசா இந்தோனேசியா ஆகிய 9 மொழிகளில், ஆசிய ஒலிம்பிக் செயற்குழுவின் உறுப்பினர்கள், 45 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள், தொழில் நுட்ப அதிகாரிகள், செய்தி ஊடகப் பணியாளர்கள் முதலியோருக்கு மொழிபெயர்ப்பு சேவையை வழங்கும்.