• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன-இலங்கை ஒத்துழைப்பு
  2010-10-25 15:17:32  cri எழுத்தின் அளவு:  A A A   

அடுத்து இடம்பெறுவது சீன-இலங்கை ஒத்துழைப்பு பற்றிய செய்தி விளக்கம். அறிவிப்பாளர் கலைமணி.
தற்போது சீன மேற்குப்பகுதி 11வது சர்வதேச பொருட்காட்சி, சி ச்சுவன் மாநிலத்தின் தலைநகர் சன்தூவில் நடைபெறுகின்றது. 6 நாட்கள் நீடிக்கும் இந்த பொருட்காட்சி, முன்னெப்போது கண்டிராத அளவில் இருந்து, சர்வதேசத்தரத்திற்கு உயர்ந்துள்ளது. இலங்கை உள்ளிட்ட 44 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழில் நிறுவனங்கள் இந்த பொருட்காட்சியில் கலந்துகொள்கின்றன. 23ம் நாள், சன்தூ நகரிலுள்ள இலங்கை துணை தூதரகத்தின் தலைவர் வலகுலுகெ நமது செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.

2009ம் ஆண்டு டிசம்பர் திங்களில், இலங்கை, சன்தூ நகரில் துணை தூதரகத்தை அமைத்தது. இதற்கான காரணம் குறித்து திரு வலகுலுகெ கூறியதாவது—

பாரம்பரிய வேளாண் நாடான இலங்கையில், வேளாண் துறை பொருளாதாரத்தின் முக்கிய தூணாகும். சீனாவின் மிக வளர்ந்த வேளாண் மாநிலங்களில், சி ச்சுவானும் ஒன்றாகும். வேளாண், சுற்றுலாத்துறை, தொழிற்துறை, வர்த்தகம், முதலீடு ஆகிய துறைகளில், சி ச்சுவான் மாநிலம் மேம்பாடு அடைந்து இருக்கின்றது. இந்த துறைகளில் சீனாவின் மேற்குப்பகுதியுடன் ஒத்துழைப்பு மேற்கொள்ளும் வாய்ப்புகளை அதிகரிப்பது தான், சன்து நகரில் துணை தூதரகத்தை அமைத்ததற்கு முக்கிய காரணமாகும் என்றார் அவர்.

10 ஆண்டுகளுக்கு முன், சீனா மேற்குப்பகுதியின் வளர்ச்சி பணியைத் துவக்கியது. சீனாவின் மேற்குப்பகுதியிலுள்ள மிக முக்கிய வர்த்தக பொருட்காட்சியான, இந்த பொருட்காட்சி, முக்கியதுவத்தை ஏற்படுத்தியுள்ளது என்று வலகுலுகெ கூறினார். அவர் கூறியதாவது—

50க்கும் மேற்பட்ட இலங்கை தொழில் நிறுவனங்கள், இந்த பொருட்காட்சியில் கலந்துகொள்கின்றன. சீன தொழில் நிறுவனங்களுடனான தொடர்பு, நிலையாக நடைபெற்று வருகின்றது. கடந்த சீன மேற்குப்பகுதி சர்வதேச பொருட்காட்சியில் 5 இலங்கை தொழில் நிறுவனங்கள் கலந்துகொண்டன. இம்முறை, இந்த எண்ணிக்கை 50ஐ எட்டியுள்ளது. இது பெரிய முன்னேற்றமாகும் என்றார் அவர்.

மேற்குப்பகுதியை வளர்க்கும் நெடுநோக்கை சீனா மேற்கொண்டு வந்த 10 ஆண்டுகாலத்தில், சீன இந்த பகுதியில் மாபெரும் பொருளாதார சமூக முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. சன்து நகரிலுள்ள இலங்கை துணை தூதரகத்தின் மூலம், இந்த நகரை பலகணியாக பயன்படுத்தி, சீனாவின் மேற்குப்பகுதியுடனான ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும் என்று வலகுலுகெ கூறினார்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040