குவாங்சோ ஆசிய விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்ளும் சீன விளையாட்டுப் பிரதிநிதி குழு அக்டோபர் 26ம் நாள் பெய்ஜிங்கில் நிறுவப்பட்டது. 1454 பேர் இந்த பிரதிநிதிக் குழுவில் இடம் பெறுகின்றனர். அவர்களில் 977 பேர் விளையாட்டு வீரர்களாவர். அவர்கள் 41 விளையாட்டுகளில் மொத்த 447 போட்டிகளில் போட்டியிடுவர்.
குவாங்சோ ஆசிய விளையாட்டுப் போட்டி நவெம்பர் திங்கள் 12 முதல் 27ம் நாள் வரை நடைபெறும். சீன நகரில் 1990ம் ஆண்டு பெய்ஜிங் ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு அடுத்து இரண்டாவது முறையாக நடைபெறும் ஆசிய விளையாட்டு போட்டி குவாங்சோ ஆசிய விளையாட்டுப் போட்டியாகும்.