அப்போது 45 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த பத்தாயிரத்து 156 விளையாட்டு வீரர்களும் 4202 வல்லுனர்களும் இவ்விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்வர். மொத்தம் 630 போட்டித் தொகுதிகள் நிறுவப்பட்டுள்ளன.
தவிரவும் போட்டிகள் நடைபெறும் 53 அரங்குகளும் 17 பயிற்சியரங்குகளும் தரத்துக்காக சோதனையிடப்பட்டு போட்டிக்குப் பயன்படுத்தலாம் என்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நவம்பர் 5ம் நாள் தொடக்கம் பல்வேறு நாடுகளின் விளையாட்டு வீரர்கள் பயிற்சி பெற இவையனைத்தும் திறக்கப்பட்டு விட்டன. போட்டிகளில் பயன்படுத்தப்படும் சாதனங்களும் கருவிகளும் சரிப்பார்க்கப்பட்டுப் பயன்பாட்டுக்கு ஆயத்தமாக வைக்கப்பட்டுள்ளன.