• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
தூய்மையான ஆசிய விளையாட்டுப் போட்டி
  2010-11-08 14:08:26  cri எழுத்தின் அளவு:  A A A   

குவாங்சோ ஆசிய விளையாட்டுப் போட்டியின் ஏற்பாடுகளில், கரி குறைப்பு, எரியாற்றல் சிக்கனம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய கண்ணோட்டங்கள் முழுமையாக வெளிப்படுத்தப்பட்டுள்ளன. சூரிய ஆற்றல், கட்டிடங்களின் எரியாற்றல் சிக்கனம், தூய்மை போக்குவரத்து உட்பட பல புதிய தொழில் நுட்பங்கள், சில விளையாட்டு அரங்குகளில் பயன்படுத்தப்பட்டன. அரங்குகளின் இயங்குதலுக்கு தேவையான ஆற்றல் செலவு இதன் மூலம் குறைக்கப்படும்."தூய்மை ஆசிய விளையாட்டுப் போட்டி"என்ற வாக்குறுதி, குவாங்சோ நகரத்தால் நடைமுறையாக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டு வருகின்றது.

விளையாட்டு அரங்குகளின் வரைவு, வடிவமைப்பு மற்றும் கட்டுமானத்தின் போக்கில், தூய்மை உயிரின வாழ்க்கைச் சூழ்நிலை, எரியாற்றல் சிக்கனம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய தனிச்சிறப்பியல்புகள் முழுமையாக கடைபிடிக்கப்பட்டன என்று இப்போட்டிக்கான ஆயத்த கமிட்டியின் நிரந்தரத் துணைத் தலைமைச் செயலாளர் சு ருய்செங் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது

கட்டிடங்கள் பயன்பாட்டில் உள்ளபோது தேவைப்படும் எரியாற்றலை சிக்கனப்படுத்தி, பசுங்கூட வாயுவெளியேற்றத்தைக் குறைக்க, சுற்றுச்சூழல் பாதுகாப்பான கட்டிடப் பொருட்கள் உள்பட சிறப்புத் தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்தார்.

2.73 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்த ஆசிய விளையாட்டுக் கிராமம், இந்நகரின் பான்யு பிரதேசத்தில் அமைந்துள்ளது. ஊடகக் கிராமம், விளையாட்டு வீரர் கிராம், தொழில் நுட்ப அலுவலர் கிராமம், முக்கிய ஊடக மையம் ஆகிய வசதிகள், போட்டிகள் நடைபெறும்போது பல்வகைத் தேவைகளை நிறைவு செய்யும். அதேவேளை, போட்டி நிறைவடைந்த பிறகு, பொது மக்கள் வாழும் புதிய குடியிருப்புப் பகுதியாகவும் அவை மாறும்.

தவிர, போட்டி நடைபெறும்போது, விளையாட்டுப் போட்டிக் கிராமம் முழுவதும் மிதிவண்டிகள், மின்னாற்றலால் இயங்கும் துள்ளுந்து முதலிய பசுங்கூட வாயுவெளியேற்றம் குறைவான போக்குவரத்து வசதிகள் வழங்கப்படும். இந்த கிராமத்தில் பயன்படுத்தப்பட வேண்டிய வாகனங்களின் எண்ணிக்கை 80விழுக்காட்டிலிருந்து 30விழுக்காடாக குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், போட்டி நடைபெறும்போது காற்று தரம் கட்டாய நிலையை எட்டுவதற்காக, குவாங்சோ நகர அரசு அதிக முயற்சிகளை எடுத்துள்ளது. 2004ம் ஆண்டு தொடக்கம், 《குவாங்சோ நகர காற்று மாசுபாட்டின் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு என்ற விதிமுறை》《சீருந்துகளின் வாயு வெளியேற்ற மாசுபாட்டின் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு விதிகள்》ஆகிய உள்ளூர் சட்ட விதிகள் நடைமுறையில் உள்ளன என்று தெரிய வருகிறது.

மறுபுறம், சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சின்னம் சீருந்துகளில் பொருத்தப்பட வேண்டும் என்ற நிர்வாக நடவடிக்கை, குவாங் நகரில் கடந்த ஆண்டு மேற்கொள்ளப்படத் துவங்கியது. பொது போக்குவரத்துத் துறையில், திரவ பெட்ரோலிய வாயுவை எரிபொருளாகக் கொண்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பான பேருந்துகள் பரவலாக பயன்படுத்தப்பட்டன.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040