• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஆயத்தப் பணிக்குப் பாராட்டு
  2010-11-10 18:00:04  cri எழுத்தின் அளவு:  A A A   

10ம் நாள் முற்பகல் 16வது குவாங்சோ ஆசிய விளையாட்டுப் போட்டி அமைப்பு குழுவின் தலைமையில் செய்தியாளர் கூட்டம் நடைபெற்றது. ஆசிய ஒலிம்பிக் செயல் மன்றத்தின் தலைமைச் செயலாளர் Randhir Singh இக்கூட்டத்தில் கலந்து கொண்டு 16வது குவாங்சோ ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான ஆயத்தப் பணிகள் மேற்கொள்ளபட்டு வருவதை உறுதிப்படுத்தியுள்ளார்.


ஆசிய ஒலிம்பிக் செயல் மன்றத்தின் அலுவலர்களுடன் இணைந்து Randhir Singh போட்டிக்குப் பயன்படுத்தப்படும் 53 அரங்குகளையும் பயிற்சியரங்குகளையும் பார்வையிட்ட பின் போட்டிக்குத் தேவைப்படும் சூழ்நிலைக்கு அனைத்து சாதனங்களும் ஏற்றவைதான். போட்டிக்குப் பயன்படுத்தலாம் என்று கூறினார். பல்வேறு நாடுகளின் பிரதிநிதிக் குழுக்கள் பதிவு செய்யும் பணிகள் முழுவதும் நிறைவடைந்து விட்டன. போக்குவரத்து, பாதுகாப்பு உத்தரவாதம், தங்கும் இடவசதி, உணவுச் சேவை, தன்னார்வ தொண்டர் மற்றும் செய்தி ஊடகச் சேவை உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிக்குச் சேவைபுரியும் பகுதிகள் சிறந்த முறையில் இயங்கத் துவங்கியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040