• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பிரமாண்டமான துவக்க விழா
  2010-11-12 22:36:21  cri எழுத்தின் அளவு:  A A A   

16வது ஆசிய விளையாட்டுப் போட்டியின் துவக்க விழா நவம்பர் 12ம் நாளிரவு சீனாவின் குவாங்சோ மாநகரில் பிரமாண்டமாக நடைபெற்றது. 1990ம் ஆண்டு பெய்ஜிங் ஆசிய விளையாட்டுப் போட்டி நடைபெற்று 20 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ஆசிய விளையாட்டுப் போட்டி சீனாவில் நடைபெறுகின்றது. ஆசிய நாடுகளின் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தமது கனவை நனவாக்கும் மேடையாக நடப்பு ஆசிய விளையாட்டுப் போட்டி இருக்கும்.

சீன தலைமை அமைச்சர் வென்சியாபாவ் 16வது ஆசிய விளையாட்டுப் போட்டி துவங்குவதாக அறிவித்ததுடன் இந்த விளையாட்டுப் போட்டி அதிகாரப்பூர்வமாக துவங்கியுள்ளது. அடுத்த 15 நாட்களில் சுமார் பத்தாயிரம் விளையாட்டு வீரர்கள் 42 தொகுதி ஆட்டப் போட்டிகளில் 463 ஆசிய சாம்பியன் போட்டியிடுவர்.

துவக்க விழாவில் அரங்கேற்றப்பட்ட கலை நிகழ்ச்சிகளும் முத்து ஆற்றின் இரு கரைகளிலுள்ள குவாங்சோ மாநகரின் அருமையான காட்சிகளும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்கின்ற விளையாட்டு வீரர்களின் மனதில் அருமையாகப் பதிந்து விட்டன. குவாங்சோ ஆசிய விளையாட்டுப் போட்டி அமைப்பு குழுவின் செயல் தலைவர் huang hua hua துவக்க விழாவில் உரைநிகழ்த்துகையில் பல்வேறு நாடுகள் மற்றும் பிரதேசங்களின் பிரதிநிதிக் குழுக்களை வரவேற்று பேசினார். சர்வதேச சமூகத்துக்கு குவாங்சோ அளித்த வாக்குறுதியை உறுதிப்பட நடைமுறைப்படுத்தும் என்று தெரிவித்தார். தவிரவும் நடப்பு ஆசிய விளையாட்டுப் போட்டியை சீனத் தனிச்சிறப்பியல்பு, குவாங்துங் பாணி, குவாங்சோ எண்ணம் ஆகியவை நிறைந்த விளையாட்டுப் போட்டியாக நடத்த குவாங்சோ அரசு பாடுபடுவதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆசிய ஒலிம்பிக் செயல் மன்றத்தின் தலைவரான இளவரசர் Ahmad ஆசிய விளையாட்டுப் போட்டி வெற்றிகரமாக நடைபெறுவதற்கு முயற்சி மேற்கொண்டுள்ள சீனாவுக்கும் குவாங்சோவுக்கும் உளமார்ந்த நன்றியை தெரிவித்ததோடு சிறந்த சாதனைகளை பெறுமாறு விளையாட்டு வீரர்களை வாழ்த்தி ஊக்குவித்தார்.

சீன மக்கள் குடியரசு ஆசிய விளையாட்டுப் போட்டிக்காக 6 ஆண்டுகளாக ஆயத்த நடவடிக்கைகளை நுணுக்கமாக மேற்கொண்டுள்ளது. இன்றிரவு 45 ஆசிய நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த தலைசிறந்த விளையாட்டு வீரர்கள் குடும்பத்தின் உறுப்பினர் என்ற முறையில் சீனாவின் அழகான குவாங்சோவில் சந்தித்து கொண்டுள்ளனர். இணக்கமான ஆசியாவுக்காக வழி பாடு செய்கின்றனர். நானும் எங்கள் அமைப்பும் இதை கண்டு மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம் என்று இளவரசர் அகமெத் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040