• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு தயாராகவுள்ள குவாங்சோ
  2010-11-12 16:43:23  cri எழுத்தின் அளவு:  A A A   
கடந்த சில நாட்களில், குவாங்சோ நகரமெங்கும் ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான இந்தச் சிறப்பு பாடலொலியை கேட்க முடியும். நகரவாசி லீயுவான் எமது செய்தியாளரிடம் பேசுகையில், குவாங்சோ ஆசிய விளையாட்டுப் போட்டி நெருங்கி வரும் வேளையில், வெளிநாட்டு விருந்தினர்களை வரவேற்க பெரும் விருப்பத்தை கொள்வதாக, தெரிவித்தார்.

பொது நகரவாசியாக நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தோம். முழு உலகத்தின் கவனமும், தற்போது குவாங்சோவில் தான் உள்ளது. பொருமையடைந்தேன். விளையாட்டு வீர்ர்கள் போட்டிகளில் தலைசிறந்த சாதனைகளைப் பெற வேண்டுமென எதிர்ப்பார்க்கின்றோம் என்று அவர் குறிப்பிட்டார்.

இதுவரை, குவாங்சோ ஆசிய விளையாட்டுப் போட்டியில் கலந்துகொள்ள பதிவு செய்துள்ள விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் மொத்த எண்ணிக்கை, 10 ஆயிரத்து 156 ஆகும். நவம்பர் 5ம் நாள் விளையாட்டு வீரர் கிராமம் அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. உணவு, தங்குவிடுதி, போக்குவரத்து, வாங்குதல், பொழுதுப்போக்கு, மருத்துவம் முதலிய சேவைகள் இங்கு சீராக வழங்கப்படுகின்றன. விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளையும் குடும்பத்தினர்களாகக் கொண்டு, இக்கிராமத்தை அன்பான ஒரு குடும்பமாக உருவாக்க விரும்புவதாக, கிராமத்தின் தலைவர் kong shao qiong அம்மையார் அறிமுகப்படுத்தினார்.

நடப்பு ஆசிய விளையாட்டுப் போட்டியில், மொத்தம் 70 விளையாட்டு திடல்கள் மற்றும் அரங்குகள் பயன்படுத்தப்படும். குவாங்சோ ஆசிய விளையாட்டுப் போட்டி அமைப்புக்குழுவின் வசதிப்பிரிவின் தலைவர் peng gao feng பேசுகையில், இதுவரை அனைத்து திடல்களும் அரங்குகளும் பல்வேறு நாடுகளின் விளையாட்டு அணிகளுக்கு அதிகாரப்பூர்வமாக சேவை புரியத் தொடங்கியுள்ளன என்று கூறினார்.

தவிர, ஆசிய விளையாட்டுப் போட்டிகளைப் பார்க்க குவாங்சோவுக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை வியப்பாகவுள்ளது. அவர்கள் பல்வேறு திடல்கள் அரங்குகளிடையில் வசதியாகவும் ஒழுங்காகவும் வந்து போகும் வகையில், குவாங்சோவின் நகரப் போக்குவரத்து முன்கண்டிராத சோதனையை எதிர்நோக்கும். இது குறித்து, குவாங்சோ நகராட்சித் தலைவர் வான்சிங்லியாங் அறிமுகப்படுத்தியதாவது:

போக்குவரத்து வசதிகளை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். இப்பொழுது, ஆசிய விளையாட்டுப் போட்டி மற்றும் நகரப் போக்குவரத்தின் தேவை, அடிப்படையில் நிறைவு செய்யப்பட முடியும் என்று அவர் தெரிவித்தார்.

2010 ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு, குவாங்சோ தயார்!

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040