• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனத் தலைமையமைச்சரின் சந்திப்பு
  2010-11-12 19:08:48  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனத் தலைமையமைச்சர் வென்ச்சியாபாவ் 12ம் நாள் குவாங்சோவில் ஆசிய ஒலிம்பிக் செயல் மன்றத்தின் தலைவர் Ahmad Sabbahவையும், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டித் தலைவர் Jacques Roggeஐயும் சந்தித்துரையாடிய போது, ஆசிய விளையாட்டு போட்டி, ஆசிய மக்களின் சிறந்த விளையாட்டு நிகழ்ச்சியும், இப்பிரதேசத்தின் பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பை விரைவுபடுத்தும் முக்கிய மேடையும் ஆகும் என்று தெரிவித்தார்.
16வது ஆசிய விளையாட்டுப் போட்டியை நடத்தும் வாய்ப்பை சீனா மதித்து, இதற்காக முழு ஆயத்தம் செய்துள்ளது. நடப்பு விளையாட்டுப் போட்டிகளின் எண்ணிக்கையும், இதில் கலந்து கொள்வோரின் எண்ணிக்கையும் வரலாற்றில் மிக அதிகம் என்று வென்ச்சியாபாவ் தெரிவித்தார். ஆசிய ஒலிம்பிக் செயல் குழு மற்றும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அளித்துள்ள மாபெரும் ஆதரவுக்கு சீனா நன்றி தெரிவித்தோடு, பல்வேறு தரப்புகளுடன் இணைந்து நெருக்கமாக ஒத்துழைத்து, இவ்விளையாட்டுப் போட்டி வெற்றி பெறுவதை உத்தரவாதம் செய்யும் என்று அவர் தெரிவித்தார்.
பல்வேறு தரப்புகளின் கூட்டு முயற்சியுடன், குவாங்சோ ஆசிய விளையாட்டுப் போட்டி வெற்றி பெறுவது உறுதி என்று Ahmad Sabbahஉம் Jacques Roggeஉம் தெரிவித்தனர்.
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040