• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவின் நிலைப்பாட்டை சீன அரசுத் தலைவர் விவரிப்பு
  2010-11-13 18:34:46  cri எழுத்தின் அளவு:  A A A   
ஆசிய பசிபி்க் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் தலைவர்களின் 18வது அலுவல் தொடர்பற்ற கூட்டம் 13ம் நாள் ஜப்பானின் yokohamaவில் நடைபெற்றது. சீன அரசுத் தலைவர் ஹூச்சிந்தாவ் முதலாவது கட்ட கூட்டத்தில் கலந்து கொண்டு, ஆசியப் பசிபிக் பிரதேசத்தின் பொருளாதார அதிகரிப்பு நெடுநோக்கு திட்டம் பற்றி சீனாவின் நிலைப்பாட்டை விவரித்தார்.
ஆசியப் பசிபிக் பொருளாதாரம் பொதுவாக சீராக வளர்ந்து, உலகப் பொருளாதாரத்தின் தொடரவல்ல மீட்சி மற்றும் அதிகரிப்புக்கு முக்கியத் தூண்டுதல் ஆற்றலாக மாறியுள்ளது. இதற்கிடையில், இப்பிரதேசத்தின் பொருளாதார வளர்ச்சிப் போக்கில், இன்னல்களும் அறைகூவல்களும் நிலவுகின்றன. பொருளாதார வளர்ச்சி சாதனைகளைப் பேணிக்காப்பதற்கு கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஹூச்சிந்தாவ் தெரிவித்தார்.
ஆசியப் பசிபிக் நாடுகள், உலக மற்றும் பிரதேசப் பொருளாதார நிலைமையின் மாற்றத்துக்கு ஏற்ப, மேலும் உயர்ந்த நிலையில் இப்பிரதேசப் பொருளாதாரத்தின் சீரான வேகமான வளர்ச்சியைத் தூண்ட வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040