2011ம் ஆண்டு பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா ஆகிய நான்கு நாடுகளின் தலைவர்களிடை 3வது அதிகாரப்பூர்வப் பேச்சுவார்த்தையை சீனா ஏற்பாடு செய்வது தொடர்பாக, இந்தியாவும் ரஷியாவும் சீனாவுக்கு ஆதரவு அளிக்கும். சீனாவின் வூஹான் நகரில் சீன-ரஷிய-இந்திய வெளியுறவு அமைச்சர்களிடை 15ம் நாள் நடைபெற்ற 10வது பேச்சுவார்த்தையில், இந்தியா மற்றும் ரஷியாவின் வெளியுறவு அமைச்சர்கள் இவ்வாறு கூறினர். சீன வெளியுறவு அமைச்சர் யாங்சியேச்சுவும் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிரிஷ்ணாவும் அன்று சந்தித்தனர். உலக வர்த்தக அமைப்பில் சேர, சீனாவும் இந்தியாவும் ரஷியாவுக்கு ஆதரவு அளிப்பதாக, இருவரும் தெரிவித்தனர்.
இம்மூன்று நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுக்கிடை அடுத்த பேச்ச்சுவார்த்தை 2011ம் ஆண்டு ரஷியாவில் நடைபெறும் என்று உறுதிப்படுத்தப்பட்டது.