• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
16வது ஆசிய விளையாட்டு போட்டி நிறைவுற்றது
  2010-11-27 22:09:06  cri எழுத்தின் அளவு:  A A A   

16வது ஆசிய விளையாட்டுப் போட்டியின் நிறைவு விழா நவம்பர் 27ம் நாளிரவு குவாங்சோ நகரத்தின் ஹாய் சின் ஷா சதுக்கத்தில் நடைபெற்றது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழுவின் உறுப்பினரும் சீன அரசவை உறுப்பினருமான லியுயான்துங் அம்மையார், ஆசிய ஒலிம்பிக் விளையாட்டுச் செயற்குழுத் தலைவர் அல்அகமத் அல் சபாஹ் முதலியோர் நிறைவு விழாவில் கலந்துகொண்டனர்.

குழந்தைகள் பாடிய குவாங்துங் மாநிலத்தின் குழந்தை பாடலான நிலாவே என்ற பாடலொலியுடன், நிறைவு விழாவின் கலை நிகழ்ச்சி துவங்கியது. ஆசிய பிரதேசத்தின் பல்வேறு பண்பாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்திய பல புகழ்பெற்ற பாடல்கள் இந்த நிறைவு விழா கலை நிகழ்ச்சியில் இடம்பெற்றன. இந்தியாவின் Menggeni, கசகாஸ்தானின் என் காதலி, இந்தோனேசியாவின் நட்சத்திரங்கள், லெபனானின் மகிழ்ச்சியான சுற்றுலா உள்ளிட்ட பல பாடல்களின் மூலம், ஆசிய கண்டத்தின் நாகரிகம் எடுத்துக்காட்டப்பட்டது.

கலைநிகழ்ச்சி நிறைவடைந்த பிறகு, ஆசிய ஒலிம்பிக் விளையாட்டுச் செயற்குழுத் தலைவர் அல்அகமத் அல் சபாஹ் நிறைவுரையை வழங்கினார். குவாங்சோ ஆசிய விளையாட்டுப் போட்டி, தலைச்சிறந்த ஆசிய விளையாட்டுப் போட்டியாக திகழ்ந்தது. சீன அரசு, சீன மக்கள், ஆசிய மற்றும் உலகளவிலான நண்பர்கள் ஆகியோர் ஆசிய விளையாட்டுப் போட்டிக்குக் கொடுத்த ஆதரவுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

இந்த குவாங்சோ ஆசிய விளையாட்டுப் போட்டி ஆசிய விளையாட்டுப் போட்டியின் வரலாற்றில் புதிய பதிவு ஆகும். இரசிகர்கள், 42 வகை தலைச்சிறந்த விளையாட்டுப் போட்டிகளைக் கண்டுகளித்தனர். 36 நாடுகள் மற்றும் பிரதேசங்களின் விளையாட்டு வீரர்களும் வீராங்கனைகளும் பதக்கங்களைப் பெற்றனர். மேலும், பல்வேறு பிரதிநிதிக்குழுகளின் வீரர்களும் விராங்களைகளும் போட்டியிட்ட போது, முயற்சி, உறுதிப்பாடு, நம்பிக்கை உள்ளிட்ட ஆசிய விளையாட்டு எழுச்சியை வெளியிட்டது என்று குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் ஹாக்கி அணியின் உறுப்பினர் Farhan Mehboob செய்தியாளருக்குப் பேட்டியளித்த போது, குவாங்சோ ஆசிய விளையாட்டுப் போட்டி பற்றிய நினைவு தமது மனதில் எப்போதும் பதிந்திருக்கும் என்று தெரிவித்தார். அவர் கூறியதாவது:

குவாங்சோ ஒரு தனிச்சிறப்பான நகரமாகும். இங்கு போட்டியில் கலந்துகொண்டது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. சீன மக்கள் நட்பார்ந்தவராவர். இரசிகர்கள் உற்சாகமாக ஊக்குவித்தனர். இங்கு தங்கிய நாட்கள், என் மனதில் ஆழப்பதிந்து விட்டன என்று குறிப்பிட்டார்.

குவாங்சோ ஆசிய விளையாட்டுப் போட்டி, இதில் கலந்துகொண்டோர் மற்றும் பங்கெடுத்தவர்களின் மனதில் மதிப்புக்குரிய நினைவை வழங்கியிருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040